நிலக்கடலை சத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறை.
தற்போது நிலக்கடலை பருப்பின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. மேலும் கிடைக்கக்கூடிய நிலக்கடலை பரப்பும் ஊட்டச்சத்து குறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் விவசாயிகள் நிலக்கடலை பருப்பின் சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பூச்சிகள் மற்றும் பல்வேறு இடர்பாடுகளில் இருந்து நிலக்கடலையை காத்து, சத்துக் குறையாமல் அவற்றை வேளாண்மை செய்யவும் ஏதுவாக பல்வேறு செயல்முறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நிலக்கடலை பருப்பின் ஊட்டச்சத்தை பாதுகாக்க டி ஏ வி 2.5 கிலோவை எடுத்துக் கொண்டு, அவற்றை அம்மோனியம் சல்பேட் 1 கிலோ எடுத்துக் கொண்டு, அவற்றை 37 லிட்டர் தண்ணீரில் கலந்து இரவு ஊற வைக்க வேண்டும். பிறகு அவற்றை வடிகட்டி 32 லிட்டர் சத்து நீராக எடுத்துக்கொண்டு அவற்றை 468 லிட்டர் தண்ணீரில் கலந்து 500 லிட்டர் கலவையாக மாற்ற வேண்டும் . அதனோடு பிளானோபிக்ஸை 35 மில்லி கலந்து கிடைக்கும் சத்துக்கலவையை 25 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை நிலக்கடலை பயிரில் அடித்து வந்தால் நிலக்கடலையின் சத்துக் குறையாமல் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் பூக்கள் உதிராமல் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பயிரின் சத்தை பாதுகாத்து விரைவாக செழிப்பாக வளர உதவுவதோடு, பயன்படுத்துபவர்களுக்கும் பயன் தரும்.