Cauliflower Paneer Gravy. 
உணவு / சமையல்

சுவையில் No Compromise: காலிஃபிளவர் பனீர் கிரேவி!

கிரி கணபதி

பொதுவாகவே சமைக்கும்போது காலிஃப்ளவர் தனியாகவும், பனீர் தனியாகவும் சமைத்துதான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சுவையான காலிஃப்ளவர் பனீர் கிரேவி செய்யலாம். இதன் சுவை உண்மையிலேயே வேற லெவலில் இருக்கும். 

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 

காலிபிளவர் - ½ கிலோ

பனீர் - ¼ கிலோ

தேங்காய் பால் - 200ml

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

செய்முறை

முதலில் காலிஃப்ளவரை வெந்நீரில் 10 நிமிடம் ஊர வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கருவேப்பிலை, இஞ்சி போட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுத்ததாக அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி வேகும்வரை வதக்க வேண்டும். அடுத்ததாக காலிஃப்ளவர் சேர்த்து நன்கு மசாலா படும்படி கிளறி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து லேசான தீயில் 10 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். 

பின்னர் அதில் பனீர் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக அனைத்தும் நன்றாக வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சூடான சுவையான காலிஃப்ளவர் பனீர் கிரேவி தயார். இது சப்பாத்தி மற்றும் பூரிக்கு வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT