Vellai Appam and Kara Chutney Img Credit:
உணவு / சமையல்

செட்டிநாடு ஸ்பெஷல் 'வெள்ளையப்பமும் காரச் சட்னியும்' செய்யலாம் வாங்க!

ராதா ரமேஷ்

தினமும் சாப்பிடும் இட்லி,தோசைக்கு மாற்றாக ஒரு நாள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம் வாங்க!

வெள்ளையப்பம்

தேவையான பொருள்கள்:

  • பச்சரிசி - 1 கப்

  • உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

  • காய்ச்சிய பசும்பால் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பசும்பால் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானவுடன் ஒரு குழிகரண்டியில் மாவை எடுத்து அதனை மெதுவாக எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

  • மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • மாவு தோசை மாவை விட சற்று கூடுதலான தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

காரச் சட்னி:

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 10

  • பூண்டு - 5

  • புளி - நெல்லிக்காய் அளவு

  • காய்ந்த மிளகாய் - 5

  • தக்காளி - 1

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான காரச் சட்னி தயார்!

குறிப்பு:

பச்சை வாசனை இருப்பதாக உணர்பவர்கள் தாளித்தவுடன் சிறிது நேரம் அடுப்பில் வைத்து வதக்கிக் கொள்ளலாம்.

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT