இன்றைக்கு சட்னி ஸ்பெஷல் ரெசிபிஸ் கருப்பு உளுந்து சட்னி மற்றும் பூண்டு கார சட்னி எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.
கருப்பு உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்;
கடுகு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
கருப்பு உளுந்து-1 கைப்பிடி.
வரமிளகாய்-5
பூண்டு-4
கருவேப்பிலை-சிறிதளவு.
தக்காளி-2
உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
கடுகு-1/2 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
கருப்பு உளுந்து சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு ½ தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், கருப்பு உளுந்து 1 கைப்பிடி, வரமிளகாய் 5 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பிறகு 4 பூண்டு, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய தக்காளி 2, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். கடைசியாக ஒரு கைப்பிடி தேங்காய் சேர்த்துவிட்டு தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கிவிட்டு இதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதை அப்படியே சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.
கடைசியாக தாளித்துக்கொள்ளலாம். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து நன்றாக வதக்கி விட்டு சட்னியை சேர்த்து கலந்துவிட்ட பிறகு சட்னிக்கு தேவையான அளவு சட்னி சேர்த்துக்கொள்ளலாம். ஒரு சூடு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார். இட்லி, தோசை, சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
பூண்டு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
நல்லெண்ணை-4 தேக்கரண்டி.
பூண்டு-25
சின்ன வெங்காயம்-10.
வரமிளகாய்-7.
புளி-சிறிதளவு.
கல் உப்பு-தேவையான அளவு.
தாளிக்க,
கடுகு-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
பூண்டு கார சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி சேர்த்து விட்டு பூண்டு 25, சின்ன வெங்காயம் 10, வரமிளகாய் 7 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது புளி ஒரு துண்டு, கல் உப்பு சிறிதளவு சேர்த்துவிட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். தாளிப்பதற்கு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து விட்டு அதில் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து விட்டு 2 நிமிடம் வதக்கிவிட்டு தண்ணீர் சிறிது ஊற்றி கொதி வந்ததும் இறக்கிவிடவும். சூப்பரான பூண்டு கார சட்னி தயார். இந்த ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.