குதிகால் வலியைப் போக்க சில எளிய யோசனைகள்!

Some simple ideas to relieve heel pain
Some simple ideas to relieve heel pain
Published on

ம் வாழ்க்கை நடைமுறை மாறிவிட்டது. அதனால் நம் உடல் நிலையிலும் ஆரோக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. தற்போது குதிகால் வலி என்பது பொதுவாக ஒரு பிரச்னையாகி விட்டது. வீட்டில் நீண்ட நேரம் நிற்பவராக இருந்தாலும் சரி, அலுவலகத்தில் நீண்ட நேரம் நிற்பவராக இருந்தாலும் சரி எல்லோருக்குமே இந்த பிரச்னை உண்டு.

பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது, குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணிபுரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அதேநேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிகால் வலி. இதைத் தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்: உடல் பருமன் அதிகரிப்பதால் குதிகால் வலி ஏற்படும். காலணிகளை காலுக்கு தகுந்தவாறு அணியாமல், பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிகால் வலி உண்டாகும். இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி வரலாம். அதிக நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதாலும் குதிகால் வலி ஏற்படும். இதனை ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ எனக் குறிப்பிடுவார்கள்.

குதிகால் வலியை போக்க எளிய மருத்துவக் குறிப்புகள்:

ஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதை பருத்தித் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிகால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

இதையும் படியுங்கள்:
தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Some simple ideas to relieve heel pain

நொச்சி இலை சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்தி, இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு இந்த எண்ணெய்யை குதிகாலில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிகால் வலி நீங்கும். உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இதன் மூலம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிகால் வலி கட்டுப்படும். வில்வக்காயை நெருப்பில் சுட்டு, அதைக்கொண்டு குதிகாலில் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும். பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com