SWEETS 
உணவு / சமையல்

தீபாவளி இனிப்புகள்: பொருள் விளங்கா உருண்டை!

கல்கி டெஸ்க்

-வனஜா செல்வராஜ்

பொருள் விளங்கா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கிலோ
வறுத்த வேர்க்கடலை - 1 கிலோ
வெல்லம் - 1கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
பொட்டுக்கடலை - 1/4 கிலோ
எள் - 100 கிராம்
தேங்காய் - 1
சுக்கு - 50 கிராம்
ஏலக்காய் - 15 நம்பர்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

(1) ஒரு கிலோ புழுங்கல் அரிசியை சிவக்க உப்பி வருமளவு வறுத்து ஆறவைத்துமிக்ஸியில் கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(2) ஒரு கிலோ வேர்க்கடலையை வறுத்து தோல் எடுத்துவிட்டு கைகளால் தீற்றிஉடைத்து, அந்த தூளாக கடுகு சைடில் கொட்டுவதை கழித்து விட்டு மீண்டும்ஒருமுறை வறுத்து எடுத்து வைக்கவும்.

(3) கால் கிலோ பாசிப்பருப்பை சிவக்க வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துவைக்கவும்.

(4) கால் கிலோ பொட்டுக்கடலையை லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.

(5) 100 கிராம் எள்ளை வெடிக்க விட்டு எடுத்து வைக்கவும்.

(6) ஒரு தேங்காயை பல்லு பல்லாக கீறி இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சிவக்கவறுத்து வைக்கவும்.

(7) ஒரு பெரிய பத்தை சுக்கு + 15 ஏலக்காய் மிக்ஸியில் போட்டு பொடித்துவைத்துக் கொள்ள வேண்டும்.

(8) கால் பங்கு பொரியரிசி மாவை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மீதிஉள்ள மாவுடன் மேற்கூறிய அத்தனை பொருட்களையும் சேர்த்து ஒரு டீஸ்பூன்உப்பு கலந்து நன்றாக கிளறி வைக்கவும்.

(9) ஒரு கிலோ வெல்லத்தை நன்கு சீவி அல்லது பொடித்துக் கொண்டு ஒரு சிறியடம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்தவுடன் வடிகட்டி விட்டு மீண்டும்அடுப்பில் வைத்து கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

(10) இப்போது கம்பி பாகு வெல்லத்தை கலந்து வைத்த கலவையில் ஊற்றி கிளறிசூடாக இருக்கும் பொழுதே பரபரவென்று உருண்டை பிடிக்க வேண்டும்.

(11) பிடித்த உருண்டைகளை அதே சூட்டோடு எடுத்து வைத்த பொரி அரிசி மாவில்பிரட்டி மீண்டும் அழுத்தமாக உருண்டை பிடிக்க வேண்டும்.

(12) பிடித்த உருண்டைகளை தட்டில் அடுக்கி மூன்றில் இருந்து நான்கு மணிநேரங்கள் உருண்டை நன்கு கெட்டிப் பட்டவுடன் எடுத்துக் காற்றுப் புகாதடப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இந்தப் பொருள் விளங்கா உருண்டை ஆறு மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. சுவையானது . சத்தானது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT