இதுவரை தக்காளி சட்னி என்றாலே தக்காளி பழம் வைத்துதான் செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் தக்காளி காயை பயன்படுத்தியும் தக்காளி சட்னி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலம். இனி வீட்டில் தக்காளிச் செடி வைத்திருப்பவர்கள் அது கனியும் வரை காத்திருக்க வேண்டாம். தேவைப்படும் போது தக்காளிக் காயை பறித்து சட்னி செய்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளிக்காய் - கால் கிலோ
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
புளி - சிறிதளவு
கொத்தமல்லி - ¼ கபா
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்தம் பருப்பு - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளி காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பூண்டின் தோலை நீக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன் நிறமாக வறுத்து, பின்னர் வரமிளகாய் சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் புலியை சேர்த்து வதக்கி கீழே இறக்கி குளிர விட வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து என்ற நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். பிறகு வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி சேர்த்து கொரகொர பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கிளறினால், அட்டகாசமான சுவையில் தக்காளிக் காய் சட்னி ரெடி.