உணவு / சமையல்

பாசிப்பயறு பக்கோடா செய்வது எப்படி

பி.பாரதி

தேவையானவை :

பாசிப்பயறு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது 

இஞ்சி - சிறிது

தனியா - 1 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சைமிளகாயை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். பாசிப்பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 

ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த பாசிப்பயறை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும். பொன்னிறமானதும் எடுக்கவும்.

ஆரோக்கியமான, வித்தியாசமான பாசிப்பயறு பக்கோடா தயார்.

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

SCROLL FOR NEXT