உணவு / சமையல்

இனிப்பு புளிப்பு மாங்கா சட்னி செய்வது எப்படி?

ஜெயகாந்தி மகாதேவன்

தேவையானவை :

பெரிய மாங்கா - 2

பச்சை மிளகாய் - 4

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

துருவிய வெல்லாம் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, மஞ்சள் தூள்,

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :

மாங்காயை துண்டு துண்டா நறுக்கி குக்கரில் போடவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். குக்கரிலிருந்து எடுத்து வெல்லத்துடன் சேர்த்து நன்கு மசிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மாங்கா பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து, சுடு சாதம், இட்லி, தோசை ஆகியவற்ற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

SCROLL FOR NEXT