முருங்கை இலை, உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை அல்லது கீரை. இதை உணவில் தினமும் பயன்படுத்தினால், அவர்கள் வயதானாலும் குச்சி ஊன்றி நடக்கவேண்டிய தேவையில்லை. அதைத்தான், முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான், என்ற சொலவடையை நம் முன்னோர்கள் சொன்னார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக் கீரையின் பயன்களை இப்பதிவில் காண்போம்
முருங்கைக்கீரையின் நன்மைகள்;
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் , ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் மற்றும் தலைமுடி என அனைத்தையும் சிறப்பாக பராமரிக்கிறது. சருமத்திற்கு முருங்கை இலைகள் பளபளப்பைத் தந்து சரும சுருக்கங்களைப் போக்குகிறது. இது தலையில் பொடுகைக் குறைத்து தலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்து வேர்க்கால்களுக்கு வலுவைத்தருகிறது. முருங்கையிலை எண்ணெய் முகப்பருக்களை சரிசெய்வதால் அழகு சாதனபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
முருங்கையிலையில் முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பீட்டாகரோட்டின் கண்ணில் ஏற்படும் மங்கலான பார்வையை ஆரம்ப காலத்திலேயே தடுக்கிறது.மற்ற கண் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது.
கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது
முருங்கை இலை கொழுப்பு, கல்லீரல், டிபி ஆகியவற்றுக்கும் உதவுகிறது. இது காசநோய் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. செல்களை விரைந்து சரிசெய்கிறது. முருங்கை இலையில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது.
நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது
முருங்கை இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள், நரம்பியல் சிதைவை எதிர்த்து போராடுகிறது. இது மூளை மற்றும் நரம்பியல் இயக்கங்களை அதிகரிக்கிறது. முருங்கையிலை அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு மருந்தாகிறது. இது செரோட்டினின், டோப்பமைன் மற்றும் நோராடிரெனாலின் ஆகியவை சுரக்க காரணமாகிறது. இவையனைத்தும் மனநிலையை மாற்றும் ஹார்மோன்கள். ஆகும். இது உடலில் பதில்அளிக்கும் தூண்டுதலை அதிகப்படுத்துகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது
உயர் ரத்த அழுத்த கோளாறுகளை , முருங்கை இலைகள் குறைக்கின்றன. இது ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது
உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுத்து நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
மூட்டு வலியை குணப்படுத்துகிறது
முருங்கைக்கீரையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், ஆர்த்ரிட்டிஸ் ஏற்படாமல் காக்கிறது. இதில் உள்ள எண்ணற்ற இரும்பு மற்றும் கால்சியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது பற்களை வலுவாக்குகிறது.
புற்றுநோயை சரியாக்குகிறது
முருங்கையிலையில் உள்ள சில உட்பொருட்கள் புற்றுநோயைத் தடுக்கிறது. நியாசிமின்சின் என்ற உட்பொருள், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.
சிறுநீரகக் கற்களை கரைக்கிறது
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரித்து, சிறுநீரகக் கற்களை கரைக்கிறது. இது உடலில் உள்ள மினரல்கள் கற்களாக உருவாகாமல் தடுக்கிறது.
வீக்கத்தைப்போக்குகிறது
திசுக்களில் நீர்சேர்ந்து ஒயிடெமா என்ற நோயை உருவாக்குகிறது. ஒயிடெமா ஏற்பட்டால் காதைச் சுற்றி வீக்கம் ஏற்படும். முருங்கையிலை எண்ணெயை தடவினால், அது ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது
முருங்கைக்கீரை ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது. நுரையீரலின்செயல்திறனையும், அதன் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.
ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது
அனீமியா போன்ற ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது. முருங்கைக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இதனால் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
முருங்கைக் கீரையை சூப்பாகவோ, பொரியலாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடுவது மிகுந்த நன்மையை கொடுக்கும்.