Kothu Chapathi Recipe! 
உணவு / சமையல்

சூப்பர் சுவையில் கொத்து சப்பாத்தி செய்யலாம் வாங்க!

கிரி கணபதி

கொத்து சப்பாத்தி என்பது தென்னிந்தியாவின் பிரபலமான தெரு உணவுகளில் ஒன்று. சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, காய்கறிகள், மசாலா பொருட்களுடன் கலந்து செய்யப்படும் இந்த உணவு, அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்கு பிரபலமானது. வீட்டில் தயாரிக்கும் கொத்து சப்பாத்தி, ஹோட்டலில் கிடைக்கும் சுவையை விட பல மடங்கு சுவையாக இருக்கும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் வீட்டிலேயே சுவையான கொத்து சப்பாத்தி எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 2 கப்

  • வெங்காயம் - 1

  • தக்காளி - 1

  • பச்சை மிளகாய் - 2

  • கேரட் - 1/2

  • பட்டாணி - 1/4 கப்

  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

  • கசூரி மீதா - 1 டீஸ்பூன்

  • எண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர், சிறிது நேரம் ஊற வைத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து சப்பாத்திகளைத் தட்டவும். அடுத்ததாக தவாவில் அவற்றை போட்டு இருபுறமும் வேகும்படி சுட்டு எடுக்கவும். 

இப்போது வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பட்டாணியை வேக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்ற சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, உப்பு சேர்த்து கிளறுங்கள். 

இறுதியாக வேகவைத்த பட்டாணி, காய்கறி, சப்பாத்தி துண்டுகளை ஒன்றாக சேர்த்து கிளறி, சிறிது நேரம் வேக வைத்தால், சூப்பர் சுவையில் கொத்து சப்பாத்தி தயார். 

இந்த கொத்து சப்பாத்தி ரெசிபி தயாரிக்க எளிமையானது சுவையானதும் கூட. இதில் உங்கள் விருப்பம் போல பல்வேறு மாறுதல்களை செய்து ஒவ்வொரு முறையும் வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம். இந்த சப்பாத்தியை பிரியாணி சாதம் அல்லது சாம்பார் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். வீட்டிலேயே தயாரிக்கும் கொத்து சப்பாத்தி உங்கள் குடும்பத்தினரை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT