Banana flower sambar-green gram kurma! Image Credits: YouTube
உணவு / சமையல்

சூப்பரான வாழைப்பூ சாம்பார்- பச்சைப்பயிறு குருமா செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ சாம்பார் மற்றும் பச்சைப்பயிறு குருமா வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வாழைப்பூ சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

கருவேப்பிலை-சிறிதளவு.

வெங்காயம்-1

தக்காளி-1

வாழைப்பூ-1கப்.

கேரட்-1கப்.

முருங்கைக்காய்-1

உப்பு- தேவையான அளவு.

சாம்பார் பொடி-1 தேக்கரண்டி.

துவரம் பருப்பு-1கப்.

வாழைப்பூ சாம்பார் செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் கடாயை வைத்து  2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி கடுகு, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்துக்கொண்டு நறுக்கிய வெங்காயம்1, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ 1 கப் சேர்த்து விட்டு,  சிறிதாக நறுக்கிய முருங்கைக்காய் 1, நறுக்கிய கேரட் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்துவிட்டு உப்பு தேவையான அளவு சேர்த்துவிட்டு 1 தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக வேக வைத்த 1 கப் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வாழைப்பூ சாம்பார் தயார். நீங்களும் விட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சைப்பயிறு-1/2கப்.

சின்ன வெங்காயம்-3

பச்சை மிளகாய்-1

பூண்டு-3

இஞ்சி-1 துண்டு.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

கசாகசா-1/2 தேக்கரண்டி.

பட்டை-1

ஏலக்காய்-2

முந்திரி-4

தயிர்-1 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-1/4 கப்.

தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.

வெங்காயம்-1கப்.

தக்காளி-1கப்.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

பச்சைப்பயிறு குருமா செய்முறை விளக்கம்.

முதலில் ½ கப் பச்சைப்பயிறை மூன்று நிமிடத்திற்கு வறுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

இப்போது மிக்ஸியில் 3 சின்ன வெங்காயம், 3 பூண்டு, பச்சை மிளகாய் 1, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, ½ தேக்கரண்டி சோம்பு, கசகசா ½ தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 1, ஏலக்காய் 2, முந்திரி 4, தயிர் 1 தேக்கரண்டி, ¼ கப் தேங்காய் சேர்த்து தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு 1 கப் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பின் பச்சைப்பயிறை சேர்த்து கலந்துவிடவும். இத்துடன் 2கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 4 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லி தூவி கொதிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான். சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சைப்பயிறு குருமா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT