Maggi Bhelpuri 
உணவு / சமையல்

வாவ்.. சூப்பரா இருக்கே இந்த மேகி பேல் பூரி! 

கிரி கணபதி

மாலை நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் பேல் பூரியும் ஒன்று. ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில்தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். ஒருவேளை உங்கள் குழந்தைகள் மாலை நேரத்தில் ஏதாவது வித்தியாசமாக ஸ்நாக்ஸ் செய்யும்படி கேட்டால், எப்போதும் போல பஜ்ஜி, போண்டா சுடுவதற்கு பதிலாக, மேகி வைத்து செய்யும் பேல் பூரி ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். 

இந்த மேகி பேல் பூரி ரெசிபி வெறும் ஐந்து நிமிடத்தில் ஈசியாக செய்யலாம். குழந்தைகளும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் இதன் சுவை நன்றாக இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

மேகி - 1 பாக்கெட் 

பாதாம் - 4

முந்திரி - 4

உப்பு - தேவையான அளவு

வேர்க்கடலை - ¼ கப்

மேகி மசாலா - ஒரு பாக்கெட்

மிளகாய்த்தூள் - ½ ஸ்பூன் 

தக்காளி - 1

வெங்காயம் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் வேர்க்கடலையை வாணலியில் சேர்த்து வறுத்து தோலை நீக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து அதில் மேகியை நொறுக்கிப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

அதன் பிறகு பாதாம், முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்து அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் சுவைக்கு ஏற்ப உப்பு மிளகாய் தூள் மேகி மசாலா போட்டு கலந்து விட வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து கலக்கி இறுதியில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தலையை தூவி கிளறினால், சூப்பர் சுவையில் மேகி பேல் பூரி ரெசிபி தயார். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT