உணவு / சமையல்

சுவைமிகு சுர்னாலி தோசை செய்வது இவ்வளவு ஈசியா!

கல்கி டெஸ்க்

சுர்னாலி தோசை தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

அவல் - 3/4 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

புளித்த தயிர் - 1/4 கப்

உப்பு

தண்ணீர்

செய்முறை:

1. பாத்திரத்தில் பச்சரிசி, வெந்தயம் சேர்த்து தண்ணீரில் கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.

2. பின்பு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம் மற்றும் அவலை தண்ணீரில் கழுவி சேர்க்கவும்.

3. பிறகு துருவிய தேங்காய், புளித்த தயிர், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

4. பிறகு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து 8 மணிநேரம்புளிக்க வைக்கவும்.

5. பின்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை கலந்துவிடவும்.

6. தோசை கல்லை சூடு செய்து, அதில் எண்ணெய் தடவி பின்பு மாவை ஊற்றி மெதுவாக மாவை எல்ல பக்கமும் பரப்பி விடவும்.

7. பிறகு தோசையை மூடி வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.

8. சுவைமிகு சுர்னாலி தோசை தயார்!

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT