உணவு / சமையல்

மேத்தி காக்ரா

கல்கி

கே.எஸ்.கிருஷ்ணவேணி.

தேவை:

கோதுமை மாவு – 1கப்

வெந்தயக்கீரை -1 கப்

மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:

வெந்தயக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கோதுமை மாவுடன் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும். இதனை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். தோசை திருப்பியால் சப்பாத்தியை அங்கங்கு அழுத்தி விடவும். திருப்பிப் போட்டும் இதேபோல் அழுத்தி விடவும். சப்பாத்தி அப்பளம் போல் மொறுமொறுவென ஆகும்வரை இப்படி செய்து எடுத்துவிடவும். எண்ணெயே சேர்க்காத சத்தான காக்ரா ரெடி. வெளியூர் செல்லும் போது இதனை எடுத்து செல்லலாம். எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும். இது ஒரு குஜராத்தி ரெசிபி. சுவையாக இருக்கும்.

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT