உணவு / சமையல்

குழந்தைகள் விரும்பும் மினி லெமன் இட்லி

பத்மப்ரியா

தேவையானவை :

இட்லி மாவு - 2 கப்

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தாளிக்க

எலுமிச்சம்பழம் - 1

கொத்தமல்லி- சிறிதளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் இட்லி மாவில் மஞ்சள் தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும், பின்பு இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும், சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம்.

பின்பு தாளித்த கலவையை இட்லியில் சேர்த்து, எலுமிச்சைச்சாறு விட்டு, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறினால் சுவையான மினி லெமன் இட்லி தயார். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT