Samayal tips... 
உணவு / சமையல்

காய்கறிகள் கலவை வெஜிடபிள் கூட்டு வகைகள்!

சேலம் சுபா

கலவை வெஜிடபிள் கூட்டு
தேவை:

கலந்த காய்கறிகள் நறுக்கியது - 1 கப் (கேரட் பீன்ஸ்  போன்றவை)
துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வறுத்து அரைக்கத் தேவையானவை தனியா - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
மிளகு சீரகம் -தலா 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை-  சிறிது
பெருங்காயம்-  சிட்டிகை
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து

செய்முறை:

துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்து அரைக்க தரப்பட்டுள்ளவற்றை  தேங்காய் துருவல் தவிர மீதமுள்ளதை  சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நிறம் மாறும்வரை வறுக்கவும். நீர் வடித்த பருப்புடன் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து  சிம்மில் வைத்து மூன்று விசில் வரை வேகவைக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து அரைத்து வைத்துள்ள மசாலா  சேர்த்துக்கிளறி மூன்று நிமிடங்கள் வைத்து இறக்கி. மூடவும்.  ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு பெருங்காயம் முதலான பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் கொட்டிக் கிளறி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சூப்பர் வெஜிடபிள் கூட்டு ரெடி. பருப்பு கசகசவென்று வேகாமல் மலர்ந்து இருப்பது முக்கியம்.

வெண்டைக்காய் புளி பச்சடி

தேவையான பொருட்கள்:

பிஞ்சு வெண்டைக்காய் - 15
சின்ன வெங்காயம் - 10
தக்காளி- 1
புளி- நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி -  1 டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
அரிசி மாவு - 1 டீஸ்பூன் 
கல்உப்பு – தேவைக்கு

தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - ஒன்று
கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு தலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது, கருவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:
வெண்டைக்காயை கழுவி உலர்ந்ததும் பழு இல்லாமல் விரல் அங்குல நீளத்துக்கு  நறுக்கி வையுங்கள். புளியை வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி முக்கால் கப் அளவுக்கு இருக்கும் அளவுக்கு எடுத்து வையுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கி வைத்த வெண்டைக்காயை நன்கு வணக்கி தனியே வைக்கவும்.

மேலும், வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து தாளித்து இரண்டாக பிளந்த வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக  வதக்க வேண்டும். இதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். ஓரளவு பச்சை வாசம் போனதும் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு கடைசியாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இந்த புளி பச்சடி சத்தான உடலுக்கு நல்லது. சூடான சாதத்தில் போட்டு சாப்பிட சூப்பராக இருக்கும் .வெல்லம் உங்கள் சாய்ஸ்.

Albinism: இந்த நோய் இவ்வளவு மோசமானதா?

News 5 – (07.10.2024) விமான சாகசம்: ‘பாதுகாப்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை’ - தவெக தலைவர் விஜய்!

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' - பாடலின் தத்துவ பொருள் என்ன?

சிங்கப்பூரில் 180 ஆண்டு கால குதிரைப் பந்தய வரலாறு முடிந்தது!

கருப்பை நீர்க்கட்டிகள்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!

SCROLL FOR NEXT