உணவு / சமையல்

காளான் கறி உருண்டை!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

காளான் – ½ கிலோ, கடலை மாவு – ½ கப், காலி ஃப்ளவர் - 100 கிராம், பீன்ஸ் - 100 கிராம், காரட் - 250 கிராம், வெங்காயம் 3, பச்சை மிளகாய் - 7, தக்காளி - 5, பச்சைக் கொத்துமல்லி - 1 கொத்து, மிளகாய்ப் பொடி – 1½   தேக்கரண்டி, மல்லிப் பொடி - 1½ தேக்கரண்டி,  உப்பு - 1½ தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள் பொடி - சிறிதளவு, கரம் மசாலா - 1 தேக்கரண்டி.

செய்முறை:

காளானைக் கழுவி, சிறு துண்டுகளாக்கி நீரில் வேகவிடவும். வெந்தவுடன், காளானைக் குளிரவிட்டு பின், கடலை மாவு, ½ தேக்கரண்டி மிளகாய்ப் பொடி,
½ தேக்கரண்டி மல்லிப்பொடி, 1½ தேக்கரண்டி உப்பு, இவற்றுடன் 5 பச்சை மிளகாய்த் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றைக் காளானுடன் நன்கு கலந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு. இந்த உருண்டைகளை மூன்று மூன்றாகப் போட்டு, ப்ரௌன் நிறத்திற்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கி, எண்ணெயில் போட்டு வதக்கி, அதனுடன் 4 கப் தண்ணீர்ச் சேர்க்கவும். பின் நறுக்கிய தக்காளியைப் போட்டு, இறுதியாக பொடியாக நறுக்கி வேகவைத்த பீன்ஸ், காலிபிளவர், காரட் இவற்றுடன் உப்பு 1 தேக்கரண்டி, மிளகாய்ப் பொடி 1 தேக்கரண்டி, மல்லிப் பொடி 1 தேக்கரண்டி மற்றும் மஞ்சள் பொடி சிறிதளவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவைகள் கெட்டியாகி ஒன்று சேர்ந்த பின்னர் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு, செய்து வைத்திருந்த காளான்  உருண்டைகளைப் போடவும். உருண்டைகள் பூவாக வெந்தவுடன், கரம் மசாலாவைத் தூவி இறக்கவும்.

குளிர் காலத்துக்கு இதமான காரம் நிறைந்த, சத்துள்ள காளான் கறி உருண்டை ரெடி.

- எம்.கீதா. மதுரை

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT