உணவு / சமையல்

புத்தாண்டிற்கு புதுப்புது இனிப்புகள்!

ரெசிபி கார்னர்

மங்கையர் மலர்

Mitha beeda

மீட்டா பீடா

தேவையானவை: முந்திரி.   – 1 கப், நெஸ்லே மில்க் மெய்ட் – 200 கிராம், - 1/4 டீஸ்பூன், கிராம்பு – 8, பாதாம், பிஸ்தா (பொடியாக நறுக்கியது) - 1/2கப், மிட்டாய் – சிறிதளவு

அலங்கரிக்க: குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:  முந்திரிப் பருப்பை மிக்ஸியில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். அடி அடிகனமான வாணலியில் முந்திரி பவுடர் + மில்க்மெய்ட்+ ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். வாணலியில் பக்கவாட்டில் ஒட்டாமல் வரும்பொழுது மார்பில் கல்லில் அல்லது சப்பாத்தி கல்லில் கொட்டி மேலே பட்டர் பேப்பரை வைத்து, குழவியால் கால் இன்ச் கனத்துக்கு மெல்லியதாக தேய்க்கவும். இதை சதுரத் துண்டுகளாக வெட்டவும். ஒரு சதுரத்தின் இரு முனைகளையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதனுள் பொடித்த பாதாம் + பிஸ்தா மற்றும் சீரக மிட்டாய் இவற்றை வைத்து அடைக்கவும். கீழ்ப்பகுதியை மடித்து ஒரு கிராம்பை குத்தவும். மேலே ஒரு குங்குமப் பூவை வைத்து அலங்கரிக்கவும்.  அருமையான சுவையில் அசத்தும் இந்த மீட்டா பீடா.

Wheat crumble

வீட் க்ரம்பள்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பொடித்த சர்க்கரை – அரை கப்,  பாம்பே ரவை – 1 டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா10 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கோதுமை மாவு + ரவை மற்றும் நெய்யை நன்கு கலக்கவும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மொத்த கலவையையும் மாவாக பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவை ஒரே அளவிலான 8 உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இப்பொழுது அடி கனமான வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருட்டி வைத்த மாவை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். (இதை அடுப்பை மிதமான தீயில் வைத்துத்தான் செய்ய வேண்டும்) அப்பொழுதுதான் உருண்டையின் உட்புறமும் நன்றாக வறுபடும். இப்படி பொன்னிறமாக வறுத்து எடுத்த உருண்டைகளை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும். சூடு ஆறியதும் உருண்டைகளை மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ளவும். இத்துடன் பொடித்த சர்க்கரை ஒன்றிரண்டாக பொடித்த பாதாம் + முந்திரி மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஒரு குட்டிக் பௌலில் போட்டு ஸ்பூன் வைத்து அப்படியே சாப்பிடலாம். சுவையில் அசத்தும் இந்த ‘வீட் க்ரம்பள்’ அல்லது லட்டுகளாக அழுத்திப்பிடித்தும் சாப்பிடலாம். வாவ் சூப்பராக இருக்கும்.

Veg Burger

ஹாட்வெஜ் பர்கர்

தேவையானவை: வட்ட வடிவ பன் – 4, உருளைக்கிழங்கு – 3, பொடியாக நறுக்கிய கேரட் கோஸ் பீன்ஸ் - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,  மைதா - ¼ கப், ப்ரெட் தூள் – 1 கப், துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன், மயோனீஸ் - தேவையான அளவு, டொமெட்டோ சாஸ் - தேவையான அளவு, உப்பு எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக்கொள்ளவும். மைதாவை தீர்க்க கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் .அத்துடன் நறுக்கிய காய்கறிகள் + இஞ்சி பூண்டு விழுது + மிளகாய் தூள் + தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, கடைசியாக மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு எடுத்து வட்டமாகதட்டி மைதா கரைசலில் முக்கிய, ப்ரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பன்னை நடுவில் வெட்டி (வட்டமாக) மயோனிஸை இரண்டு பக்கமும் தடவி, பொரித்த கட்லெட்டுகளை வைக்கவும்.  மேலே வட்ட வட்டமாக வெட்டிய வெங்காயம் வைத்து, அதன்மேல் துருவிய பீஸ் சிறிதளவு+டொமெட்டோ பாஸ் சிறிதளவு பரத்தி மேலே எள் தூவி அப்படியே சாப்பிடவும்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT