ராகி அல்வா
ராகி அல்வா 
உணவு / சமையல்

ராகி அல்வா - தீபாவளி இனிப்பு!

இளவரசி வெற்றி வேந்தன்

தேவையான பொருட்கள்:

1.ராகி மாவு - 1 கப்

2.கருப்பட்டி - 1 கப் ( துருவியது)

3.நெய் - 3/4 கப்

4.முந்திரி பருப்பு - தேவையான அளவு

5.தண்ணீர் - 3 கப்

செய்முறை:

1. ராகி மாவை 3 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

2.வாணலியை சூடாக்கி மாவு கரைசலை சேர்க்கவும்.

3. மாவு வேகும் வரை நன்கு கிளறவும்.

4.மாவு வெந்தபின் கருப்பட்டி துருவலை சேர்க்கவும்.

5.இடையிடையே நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

6.முந்திரிபருப்பை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

7.நெய் முழுவதுமாக சேர்த்து சிறுதீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.

8.நெய பிரிந்து மேலே வந்த பின் இறக்கி சூடாக பரிமாறவும்.

9. பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா சுருண்டு வரும் வரை கிளறி ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து இறக்கவும்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT