சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Sunflower seeds
Sunflower seedshttps://www.amazon.in

ன் பிளவர், சூரியகாந்தி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சமையல் எண்ணெய் மட்டுமே. ஆனால், அதையும் தாண்டி சூரியகாந்தி விதைகளில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கொட்டிக் கிடக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சூரியகாந்தி விதைகளில் 90 விழுக்காடு வைட்டமின்கள், பைட்டோ கெமிக்கல்கள், புரதம், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இந்த விதைகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கிறது.

இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்த உறைவை இது தடுக்கும். சூரியகாந்தி விதைகளில் காணப்படும் பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் பிறக்கப்போகும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் இருக்கும் உயர்தர பொட்டாசியத்தின் அளவு, உடலில் இருக்கும் சோடியத்தின் அளவை சீராக்குகிறது. பைட்டோ கெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதுடன், வளர்ந்து வரும் கருவை தாங்கும் ஆற்றலையும் கொடுக்க உதவுகிறது.

ஃபோலேட், இரும்பு, கால்சியம், துத்தநாகம், செலினியம் மற்றும் தாமிரம் போன்ற பல்வேறு தாதுக்களின் வளமான மூலமாக சூரியகாந்தி விதைகள் இருக்கின்றன. இந்த விதைகளில் இருக்கும் ஃபோலிக் அமிலம், நுரையீரலில் இருந்து உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தின் தேவை அதிகம் என்பதால், அவற்றின் மூலதனமாக இருக்கும் சூரியகாந்தி விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியின்மையை தடுக்க ஃபோலிக் அமிலம் பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!
Sunflower seeds

மலச்சிக்கல் தீர: சூரியகாந்தி விதைகளில் உள்ள நொதிகள் செரிமான மண்டலத்தை ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்கிறது. அது மட்டுமில்லாமல், வயிறு மற்றும் குடல் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தி குடல் நோய்கள் வராமலும் தடுக்கிறது.

கெட்ட கொழுப்பு கரைய: சூரியகாந்தி விதைகள் உடலில் உள்ள நச்சுத்தன்மையையும், கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை எளிதில் குறைக்கலாம்.

பெண்களுக்கு நல்லது: சூரியகாந்தி விதையில் உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடிய என்சைம்கள் அதிக அளவில் உள்ளன. இது குறிப்பாக பெண்களின் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன், ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்தி மாதவிடாய் மற்றும் தைராய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் இந்த விதைகள் கிடைக்கும். அதை வாங்கி தினமும் சாப்பிட்டு உடல் நலன் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com