Aappam kuruma recipes 
உணவு / சமையல்

மெதுமெது தேங்காய் ஆப்பமும், தொட்டுக்க கேரளா குருமாவும்!

சேலம் சுபா

காலை டிபனுக்கு எப்பொழுதும் தோசை இட்லியா என்று கேட்பவர்களுக்கு ஆப்பம் என்பது சந்தோஷம் தரக்கூடிய விஷயம் அதிலும் தொட்டுக்க குருமாவுடன் ஆப்பம் காலை நேரத்தில் வயிறு நிறையும் சத்து மிகுந்த உணவாகும். ஆப்பத்துடன் தேங்காய் ஏலக்காய் சர்க்கரை சேர்த்து எடுத்த தேங்காய்ப்பால் இனிப்பு பிரியர்கள் விரும்புவர். 

இங்கே மெதுமெதுன்னு தேங்காய் ஆப்பமும் டக்கரா ஒரு கேரளா  குருமாவும் செய்வோமா?

தேங்காய் ஆப்பம் 
தேவையானவை:

பச்சரிசி- 2 கப்
புழுங்கல் அரிசி- 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் -1 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 1 சிறிய கப்
மாவு சோடா உப்பு- சிட்டிகை


செய்முறை:

மேலே உள்ள பொருட்களில் தேங்காய் தவிர மற்றவற்றை நன்கு கழுவி ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை வெகு நைசாக அரைத்து எடுக்கும் நேரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சிறிது சேர்த்துக் கரைத்து குறைந்தது.

ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். ஆப்பம் ஊற்ற எடுக்கும்போது சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்க்க கரைத்து ஆப்பச்சட்டியில் சுழற்றி ஊற்றி மூடிபோட்டு மிதமான தீயில் வைத்து வேகவிட்டு எடுத்தால் மெதுவாக ஆப்பம் ரெடி.

கேரள குருமா

தேவையானவை
தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை பட்டாணி+கேரட் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 கப்(நீளமாக வெட்டியது’)
கறிவேப்பிலை - 4 கொத்து இலவங்கப்பட்டை - 1 அங்குலம்
வெட்டிய காய்கறிகள் - 1 கப் (விரும்பினால்)
பெரிய வெங்காயம் -3
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - -1 கைப்பிடி

அரைக்க:
தேங்காய் துண்டுகள் - -1 சிறிய கப்
இஞ்சி.  சிறு துண்டு
பூண்டு. 6 பற்கள்
பச்சை மிளகாய் - 3 நீளமாக வெட்டியது’
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரைக்கப்பட்ட தந்துள்ள பொருட்களை சிறிது நீர் சேர்த்து கொர கொரவென்று மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சூடு இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை 4 நிமிடங்கள் வதக்கி வெட்டிய உருளைக்கிழங்கை 2 கப் நீர் சேர்த்து கிளறி 4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அதில் உரித்த பச்சை பட்டாணி கேரட் சேர்த்து மேலும் 4 நிமிடங்கள் வதக்குங்கள். காய்கறிகள் குழையாமல் இருக்கவேண்டும். அடிப்பிடிக்காதவாறு அவ்வப்போது கிளறவேண்டும். தண்ணீர் அதிகம் வேண்டாம்.

இப்போது அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக மேலும் 3 நிமிடங்கள் கிளறி தேவையான உப்பு கொத்தமல்லித்தழை சேர்த்து  இறக்கினால் ருசியான சத்தான தேங்காய் எண்ணெய் மணக்கும் கேரளா குருமா தயார். இதை ஆப்பம் மட்டுமின்றி தோசை, பரோட்டா அல்லது சப்பாத்தியுடனும் தொட்டுக்க ருசி அள்ளும்.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT