உணவு / சமையல்

ஆவியில் வேக வைத்த சத்தான வாழைப்பூ வடை!

எஸ்.விஜயலட்சுமி

தேவையான பொருட்கள்:

சிறிய வாழைப் பூ - ஒன்று

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய்-  5

சோம்பு - அரை ஸ்பூன்

பட்டாணிப் பருப்பு - 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

ட்டாணிப் பருப்பை கழுவி விட்டு, 2 மணி நேரங்களுக்கு நீரில் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து நரம்பு, மற்றும் வெள்ளையாக இருக்கும் களைகளை நீக்கி பொடியாக அரிந்து மோர் கலந்த நீரில் போடவும். பட்டாணி பருப்பை  மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு உப்பு, சோம்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாழைப்பூவை நீரின்றி பிழிந்து விட்டு பருப்புடன் போட்டு ஒரே ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து, கருவேப்பிலை கொத்தமல்லி தலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவை அனைத்தையும் அரைத்த மாவில் கலந்து கொள்ளவும்.  துளி பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை வடைகளாக தட்டி  இட்லிப் பானைத் தட்டுகளில் லேசாக எண்ணெய் ஊற்றி அதன் மேல் இந்த வடைகளை வைக்க வேண்டும். 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்தால் மிகச் சுவையான வாழைப்பூ வடை ரெடி. ஆவியில் வேக வைப்பதனால் இதன் சத்து அப்படியே நமக்கு கிடைக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள்  என யார் வேண்டுமானாலும் இதை விரும்பி சாப்பிடலாம்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT