உணவு / சமையல்

டேஸ்டி, ஈஸி, டூட்டீ – ஃப்ரூட்டி எக்லெஸ் கேக்!

மும்பை மீனலதா

தேவையானவை:

டூட்டி ஃப்ரூட்டி – ¼ கப், சலித்த மைதா – ½ கப்,
வெண்ணெய் – 1 கப் (Room Temperature), பொடி செய்த சீனி – ½ கப், நல்ல தயிர் – 1 கப், பேகிங் சோடா – சிறிது, பேகிங் பவுடர் – சிறிது, பால் – ¼ கப் (சூடாக்கி ஆற வைத்தது), வெனிலா எஸென்ஸ் – சிறிது.

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் டூட்டி-ப்ரூட்டியைப் போட்டு, சலித்த மைதாவைச் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

மற்றுமொரு கண்ணாடி கிண்ணத்தில் வெண்ணெயைப் போட்டு நன்கு அடிக்கவும். பிறகு பொடி செய்த சீனியை சேர்த்து கலக்கி க்ரீம் செய்யவும்.

இதில் காற்று உருவாக உருவாக, கேக் மென்மையாக வரும்.

இத்துடன் தயிரையும் சேர்த்து மிக்ஸ் செய்தபின், பேகிங் சோடா, பவுடர், மிக்ஸ் செய்து வைத்திருக்கும் டூட்டி-ப்ரூட்டி, சிறிது பால் விட்டு நன்றாக கலந்து, வெனிலா எஸென்ஸையும் விட்டு மிக்ஸ் செய்து வெண்ணெய் தடவிய ட்ரேயில் கொட்டி பேகிங் மோடில் 16000 – சென்டர் ரேக்கில் சுமார் 60 நிமிடங்கள் வைத்தெடுத்து ஆறவிட்டு துண்டுகள் போட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டோ டேஸ்ட்தான்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT