TIRUPATHI LADDU 
உணவு / சமையல்

பக்தி ப்ரசாதமான திருப்பதி லட்டு! தீபாவளி ஸ்பெஷல்!

கல்கி டெஸ்க்

-வெங்கடேஷ் ஆறுமுகம்

தேவையானவை: கடலை மாவு - 250 கிராம், சர்க்கரை - 500 கிராம், உலர்திராட்சை & முந்திரி – தலா 50 கிராம், கற்கண்டு - 2 tbs, பச்சைக்கற்பூரம் - கால்டீஸ்பூன், ஏலக்காய் - 12, கிராம்பு - 5,  நெய் - பூந்தி பொரிக்க & இதர தேவைகளுக்கு.

🌕 திருப்பதி லட்டின் ரகசியமே நெய்யில் தான் உள்ளது. கடலை மாவை கரைத்துசெய்கின்ற பூந்தியை நெய்யில் மட்டுமே  பொரிக்க வேண்டும். ருசியும், திருப்பதி லட்டின் அந்த மஞ்சள் நிறமும் அப்போது தான் வரும்.

🌕 கடலை மாவு கரைக்கும் பதம் மிக முக்கியம். சாதாரண லட்டிற்கு மாவைகரைப்பதைப் போல தளர்வாக இன்றி நன்கு  கெட்டியாகக் கரைக்க வேண்டும். 

🌕 பூந்தி போடும் கரண்டியில் மாவை அள்ளி ஊற்றி ஒரு குழிக்  கரண்டியால் அதைதோசைமாவு தேய்ப்பது போல தேய்த்தால்  மட்டுமே பூந்தி துளைகளின் வழியே மாவுவிழவேண்டும்! அதுவே சரியான பதம்!

🌕 கடலை மாவு அளவு எவ்வளவோ அப்படியே ஒரு மடங்கு அதிகம் சர்க்கரைசேர்ப்பதே அளவு சர்க்கரைக்கு பாகுபதம்  தேவையில்லை! ஒரு கம்பி பதம் வைத்துகாய்ச்சினாலும் போதும்.

🌕 பாகு கொதிக்கும் போது இடையிடையே தேவையான நெய்  சேர்ப்பது திருப்பதிலட்டின் தனித்துவமான ருசிக்கு ஒரு காரணம்,

🌕 ஏலக்காய், பச்சைக் கற்பூரம் & கல்கண்டு மிக மிக முக்கியம்! இவற்றை மிகவும்பொடியாக அரைக்காமல் ஒன்றிரண்டாக  இடித்துச் சேர்ப்பது அவசியம்.

🌕 முந்திரி உலர்திராட்சைகளையும் நெய்யில் பொரிப்பது முக்கியம்! இதில் பாதாம்பருப்பு, பேரீட்சை, சேர்ப்பது கூடுதல்  ஆப்ஷனே! 

🌕 பெரிய துளை உள்ள கரண்டியில் பூந்தி செய்தால் திருப்பதி  லட்டு போலவேலட்டுகள் பிடிக்கலாம். இனி கீழே லட்டு  செய்முறை இந்த செய்முறை அளவில்மீடியம் சைஸ் லட்டுகள்  25 - 30 செய்யமுடியும்!

LADDU

செய்முறை: கடலை மாவை நீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். அடிகனமானவாணலியில் நெய் ஊற்றி, அது சூடானதும் அடுப்பை மிதமாக எரியவிட்டுதேவையான மாவை பூந்திக்கரண்டியின்  மேல் ஊற்றி அதை குழிக் கரண்டியால்தேய்த்து பூந்திகள் நெய்யில் வெந்ததும் மெதுவாக திருப்பவும்.

இரு பகக்கமும் வெந்ததும் அதை தனியே நெய்யை வடித்து  எடுத்துவிட்டு அதேநெய்யில் முந்திரி & திராட்சையை பொரித்து  எடுத்து வைக்கவும். பிறகு ஒருபாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும்  அளவு  நீர் விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகுகாய்ச்சவும். சர்க்கரை, பாகு கொதிக்கும்போதே 4tbs நெய்யை இடை இடையே அதில் சேர்த்து..

இடித்த கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறி பின்னர் பொரித்தபூந்தி, கல்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவிடவும். கைகளில்சிறிது நெய்யை தடவிக்கொண்டு  கைபொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாகப்பிடிக்கவும். இது பல நாட்கள் கெடாது. தனித்த ருசியான திருப்பதி லட்டு பிரசாதம் இப்படித்தான் தயாராகிறது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT