உணவு / சமையல்

"சில்"லென பனை நுங்கு பாயாசம் சாப்பிட்டு பாருங்களேன்...!

கல்கி டெஸ்க்

கோடை காலம் என்றாலே உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இளநீர், தர்பூசணி, தண்ணீர், பனை நுங்கு, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கோடைக்காலம் முழுவதும் அவற்றை ஒரே மாதிரியாக சாப்பிட்டால் நமக்கு சலித்து போய்விடும். அதனால் வித்தியாசமான சுவையுடன் சில்லென பனை நுங்கு வைத்து பாயாசம் செய்து சாப்பிட்டு பாருங்களேன். அதற்கு பிறகு அடிக்கடி இந்த பாயசத்தை செய்து சாப்பிடுவீங்க....!

பனை நுங்கு வைத்து பாயாசம் செய்வது எப்படி தெரியுமா ?

தேவையான பொருட்கள் :

பனை நுங்கு – 15.

பால் – 1 லிட்டர்.

பாதாம் பிசின் – 3 துண்டு.

ஏலக்காய் – 5.

செய்முறை :

பாயாசம் செய்வதற்கு முந்தைய நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் நன்கு உப்பி, ஜெல் பதத்திற்கு வரும் வரை ஊற வைப்பது அவசியம்.

பாயாசம் செய்ய எடுத்துக்கொண்ட நுங்கினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர் இதில் 3 நுங்கினை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். மீதமுள்ள நுங்கினை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். சேர்க்காமல் மைபோல அரைக்கவும்.

இப்போது பாயாசம் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடேற்றவும். பால் கொதிவரும் நிலையில் இதில் அரைத்து வைத்த நுங்கினை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் இதனுடன் 5 ஏலக்காயை தட்டி சேர்த்துக்கொள்ளவும். ஏலக்காயை சேர்த்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

இப்போது, இதனுடன் இனிப்புக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து, இதனுடன் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளையும் சேர்த்து கலந்து விட வேண்டும். ஜெல் பதத்திற்கு ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து கிளறவும்.

நுங்கு தண்ணீர் தனியே எடுத்து வைத்திருப்பின் அதை இதனுடன் சேர்த்து முதல் கொதி வரும் வரை காத்திருக்கவும். முதல் கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கிவிட சுவையான நுங்கு பாயாசம் ரெடி. தேவைப்பட்டால், முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

அடுப்பில் இருந்து இறக்கிய பாயாசத்தை ஆற விட்டு, ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும். 30 நிமிடம் கழித்து இந்த பாயாசத்தை ஒரு கோப்பையில் ஊற்றி குளிர்ச்சியாக பரிமாறி விட்டால் போதும் வெய்யிலுக்கு இதமாக சுவையாக இருக்கும்

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT