உணவு / சமையல்

ஊர் மணக்கும் குழம்பு வகைகள்!

மங்கையர் மலர்

தஞ்சாவூர் பொரித்த குழம்பு

தேவை: வெண்டைக்காய் – ¼ கிலோ, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, நாட்டுத் தக்காளி – 4, குழம்புப் பொடி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ¼ குழிக்கரண்டி. வடகம் – 2  டீஸ்பூன், புளி -1 எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கு.

வறுத்து அரைக்க: தேங்காய் – ½ மூடி தனியா – 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 8, வெந்தயம் – ½ டீஸ்பூன்

தாளிக்க: கடுகு -1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, வெந்தயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: தாளிப்பில் உரித்த வெங்காயம், நறுக்கிய தக்காளி, சுத்தம் செய்து நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, குழம்புப் பொடி, உப்பு போட்டு நன்கு கொதித்தபின், வறுத்து அரைத்த விழுதைச் சேர்க்கவும். வடகத்தைப் பொரித்து குழம்பில் போடவும்.

திருநெல்வேலி வத்தல் குழம்பு

தேவை: காய்ந்த சுண்டைக்காய் – 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி, நாட்டுத் தக்காளி – ¼ கிலோ, புளி –1 எலுமிச்சை அளவு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி, உப்பு – தேவைக்கு, மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: முதலில் எண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து எடுக்கவும். தாளிப்பில் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, வறுத்த சுண்டைக் காயை ஒன்றன் பின் ஒற்றாகப் போட்டு வதக்கவும். குழம்புப் பொடியைப் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.

கும்பகோணம் ஐந்து வத்தல் குழம்பு

தேவை: வெண்டைக்காய் வத்தல் – 6, சுண்டைக்காய் வத்தல், கொத்தவரங்காய் வத்தல் – தலா 1 கைப்பிடி, பாகற்காய் வத்தல், 10 குடைமிளகாய் வத்தல் – 6 துண்டங்கள், புளி – 1 எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கு நல்லெண்ணெய் – 1½ குழிக்கரண்டி, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், வடகம் -2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி – தலா 2.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – ½ டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: தாளிப்பில் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். வத்தல்களை தனித்தனியாக வறுத்து எடுத்ததை தாளிப்பு வதக்கலில் சேர்க்கவும். கரைத்த புளி, உப்பு, குழம்புப் பொடி சேர்த்து கொதித்து பேஸ்ட் போல் வரும்வரை அடுப்பில் வைக்கவும். நன்கு கொதித்த பிறகு இறக்கவும்.

காரைக்குடி எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவை: கத்தரிக்காய் – ¼ கிலோ, சின்ன வெங்காயம் 2 கைப்பிடி, தக்காளி (நறுக்கியது)-2 கைப்பிடி, புளி – 1 எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கு, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், மஞ்சள்பொடி – ¼ டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ½ மூடி, எண்ணெய் – 1½ குழிக்கரண்டி.

தாளிக்க: கடுகு – 1 ½ டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -  2, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கத்திரிக்காயை காம்புடன் நாலாக வகிர்ந்து, முதலில் தனியாக வதக்கி எடுத்துக்கொள்ளவும் தாளிப்பில் வெங்காயம், தக்காளிப் போட்டு வதக்கி, வதக்கிய கத்திரிக்காயைச் சேர்ந்து, மஞ்சள் பொடியைப் போடவும். கரைத்த புளி, உப்பு, குழம்புப் பொடியைச் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலைப் பச்சையாக அரைத்து, குழம்பில் சேர்த்து கொதித்த பின் இறக்கவும்.

வேலூர் காராமணி, கத்திரிக்காய் குழம்பு

தேவை: சிவப்பு நிற காராமணி – முள் இருக்கும் கத்திரிக்காய் – ¼ கிலோ, நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 கைப்பிடி, நறுக்கிய நாட்டுத் தக்காளி – 2 கைப்பிடி, எண்ணெய் – 1 குழிக்கரண்டி, குழம்புப் பொடி – 3 டீஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு  - உப்பு – தேவைக்கு, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 ½ டீஸ்பூன், வெந்தயம் – ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்த பின், வேக வைத்துக் கொள்ளவும். தாளிப்பில், வெங்காயம், தக்காளி, நறுக்கிய கத்திரிக்காய், வெந்த காராமணியை, ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். ஒன்றரை தம்ளர் தண்ணீரில் வேகவிட்டு, கத்திரி சுருங்கிய பின் புளியைக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடியைப் போட்டு, குழம்புப் பொடியைச் சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறிப் போட்டு கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்த பின் இறக்கவும்.

மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?

சந்தையில் வலம் வரும் போலி பனீர்… ஜாக்கிரதை மக்களே! 

தார்வாட் பேடா: கர்நாடகாவின் சுவை நிறைந்த இனிப்பு!

நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

நாக்கில் உள்ள புண்ணை விரைவில் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்! 

SCROLL FOR NEXT