பழைய சாதம் 2 கப்
தேங்காய் துருவல் ஒரு கப்
மைதா ரெண்டு ஸ்பூன்
ரவை கால் கப்
உப்பு தேவையான அளவு
மிக்ஸியில் சாதம், தேங்காய் துருவல், மைதா, தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் விட்டு நைசாக அரைக்கவும். அதில் கால் கப் ரவையை கலந்து வைத்து விடவும். நன்கு புளிப்பு வந்ததும் (8மணி நேரம்) தேவையான அளவு நீர் விட்டு கோதுமை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இப்படி இரவில் அரைத்து வைத்துவிட்டு காலையில் ஆப்பம் செய்யலாம் அல்லது காலையில் அரைத்து வைத்து இரவுக்கு ஆப்பம் செய்யலாம். மாவு நன்கு பொங்கி வந்தால்தான் ஆப்பம் கண் கண்ணாக விட்டுக் கொண்டு ரொம்ப சாஃப்ட்டாக வரும். ரொம்ப மெனக்கிடாமல் இந்த முறையில் ஆப்பம் ஈசியாக செய்துவிடலாம்.
கேரட் சட்னி!
கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கேரட் 1
பூண்டு 4 பற்கள்
வறுத்த வேர்க்கடலை 1/4 கப்
உப்பு தேவையானது
புளி கொட்டை பாக்களவு
பச்சை மிளகாய் 4
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள்
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து எடுக்கவும். கேரட்டை துண்டுகளாக்கி பூண்டுடன் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.
முதலில் வறுத்த பருப்புகளுடன் உப்பு, புளி, தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வதக்கிய கேரட், பூண்டு,4 பச்சை மிளகாய் சேர்த்து தேவையான நீர் விட்டு கெட்டியாக அரைத் தெடுக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். இட்லி, தோசை, பொங்கலுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.