குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுற ஈவினிங் ஸ்நாக்ஸ் பத்தி தான் பார்க்க போறோம். மடக்கு ஸ்வீட் பூரி மற்றும் பிரட் சமோசாவை எப்படி சுலபமா வீட்டிலேயே செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.
மடக்கு ஸ்வீட் பூரி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா-1 கப்.
சக்கரை -1கப்.
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்- சிறிதளவு.
எண்ணெய்-1 கரண்டி.
ஏலக்காய்-2
மடக்கு ஸ்வீட் பூரி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1கப் மைதாவை சேர்த்து கொள்ளவும். மாவுக்கு தேவையான அளவு உப்பு, நிறத்திற்காக மஞ்சள் சிறிது, 1 கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், 1 கப் ஜீனி, ஏலக்காய் 2 சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது மாவை எடுத்து உருண்டை உருட்டி நன்றாக தேய்த்து கொள்ளவும். தேய்து வைத்திருக்கும் மாவை ஒன்றின் மீது ஒன்றாக எண்ணெய் தடவி அடுக்கவும். பிறகு அதை சுருட்டி குட்டி குட்டியாக வெட்டி எண்ணெயில் போட்டு 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். இப்போது வெந்த பூரியை எடுத்து செய்து வைத்திருக்கும் பாகில் போட்டு எடுத்தால் சுவையான மடக்கு ஸ்வீட் பூரி தயார். இதை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
பிரட் சமோசா செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
உப்பு- தேவையான அளவு.
மிளகாய் தூள்-1/4 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 தேக்கரண்டி.
உருளை-1
கொத்தமல்லி- சிறிதளவு.
பிரெட்-5
மைதா மாவு-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
பிரட் சமோசா செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் ¼ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ½ தேக்கரண்டி இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கிண்டி எடுத்து கொள்ளவும். இத்துடன் உருளை 1, கொத்தமல்லி சிறிது தூவி இறக்கவும்.
முதலில் ஒரு தேக்கரண்டி மைதாவை தண்ணீரில் கலக்கி பேஸ்ட் பதத்திற்கு செய்து வைத்து கொள்ளவும். இப்போது பிரட்டை எடுத்து அதை தண்ணீரில் விட்டு நனைத்து பிழிந்துவிட்டு, உள்ளே உருளை கலவையை வைத்து பிரட்டின் ஓரத்தில் மைதா பேஸ்ட்டை தடவி ஒட்டி விடவும். இதை கொதிக்க வைத்திருக்கும் எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு 20 செகெண்டில் எடுத்துவிடவும். நன்றாக பிரட் கோல்டன் பிரவுன் நிறத்தில் வந்ததும் எடுத்து வைத்து சாஸூடன் பரிமாறலாம். பிரட் சமோசா டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டிலே இந்த ரெசிபியை செஞ்சி பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.