காளான் ரெசிபி... 
உணவு / சமையல்

ரோட்டுக்கடையில் சாப்பிடும் காளான் ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றும் ரோட்டுக்கடையில் விற்கப்படும் காளான் உணவுகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதை வாங்கி உண்பதற்காகவே இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய, நாவில் எச்சில் ஊற வைக்கும் காளானை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காளான் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ்-200 கிராம்.

காளான்-200 கிராம்.

மைதா- 1கப்.

சோளமாவு-1/4 கப்.

மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

மசாலா செய்வதற்கு,

எண்ணை -2 தேக்கரண்டி.

சிறிதாக வெட்டிய வெங்காயம்-2.

இஞ்சு பூண்டு விழுது-1 தேக்கரண்டி.

தக்காளி- 3

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை- சிறிதளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மல்லி தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

சோள மாவு -1 தேக்கரண்டி.

தண்ணீர்- 1கப்.

அழகிற்காக வெங்காயம், கொத்தமல்லி பொடியாக நறுக்கியது- சிறிதளவு.

காளான் ரெசிபி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 200 கிராம் முட்டைகோஸ், 200 கிராம் காளானை எடுத்து கொள்ளவும். அதை தண்ணீரில் நன்றாக அலசிய பிறகு அதில் ஒரு கப் மைதா மாவு, ¼ கப் சோளமாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் அளவிற்கு பிசைந்து வைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது பிசைந்து வைத்திருக்கும் காளானை கொஞ்சம் பெரிதாக, தட்டையாக எண்ணையில் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது பொரிந்திருக்கும் காளானை இரண்டு மூன்றாக பிய்த்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பேஃனை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணை சேர்த்து  2 சின்னதாக வெட்டி வைத்த வெங்காயம், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது 3 தக்காளியை எடுத்து மிக்ஸியில் அரைத்து அதையும் பேஃனில் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ கரம் மசாலா, 1 தேக்கரண்டி மல்லி தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒரு தேக்கரண்டி சோளமாவில் 1கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து அதை பேஃனில் ஊற்றி கிண்டவும். அப்போதுதான் காளான் கிரேவியில் நன்றாக ஒட்டும்.

இப்போது செய்து வைத்திருக்கும் முட்டைகோஸ் மஷ்ரூமை அத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு 5 நிமிடம் அடுப்பிலே வைத்து இறக்கவும். கடைசியாக அழகிற்காக கொஞ்சம் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கியதை அதன் மீது தூவி இறக்கவும். காளானை எப்போதும் சூடாக சாப்பிடும்போதே சுவையாக இருக்கும். இந்த காளான் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும்.  நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டில் செய்து பார்க்கவும்.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT