உணவு / சமையல்

மரவள்ளி கிழங்கு வடை

கல்கி

வி.கலைமதி சிவகுரு, நாகர்கோவில்.

தேவையானவை:

மரவள்ளிகிழங்கு-1/4 கிலோ

புழுங்கல் அரிசி-1/4கிலோ

மிளகாய் -6

வெங்காயம்-150 கிராம்

சோம்பு சிறிது

கடலை எண்ணெய்-1/2 லி.

கறிவேப்பிலை-1கொத்து

தேவைக்குஉப்பு

செய்முறை:

புழுங்கல் அரிசியை1மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளி கிழங்கை தோலை நீக்கி விட்டு நன்றாக கழுவி அதனை நைசாக சீவி கொள்ள வேண்டும். வெங்காயத்தைபொடி யாக நறுக்கி கொள்ளவும் பிறகு அரிசி, மிளகாய், சீவிவைத்த கிழங்கு, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக பிசைய வேண்டும்.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும்.

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

சிறுகதை - ஒரே ஒரு பூ!

பளபளப்பான சருமத்தைப் பெற அன்னாசி பழத்தை இப்படியெல்லாம் பயன்படுத்துங்கள்! 

SCROLL FOR NEXT