Valentine's Day 2024. 
வீடு / குடும்பம்

காதலர் தினத்தன்று பரிசாகக் கொடுக்கக்கூடாத 4 பொருட்கள்.. மீறி கொடுத்தா? 

கிரி கணபதி

வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எதுபோன்ற பரிசுகளை ஒருபோதும் வழங்கக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

வாஸ்து சாஸ்திரப்படி ஒருவருக்கு தவறான பரிசுகளைக் கொடுப்பதால் அந்த உறவே மோசமாகிவிடும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த காதலர் தினத்துக்கு பரிசுகளைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருங்கள். முக்கியமாக இந்த பதிவில் நான் சொல்லப்போகும் நான்கு பொருட்களை ஒருபோதும் யாருக்கும் பரிசாகக் கொடுக்க வேண்டாம். 

1. கைக்குட்டை: கைக்குட்டையை யாருக்குமே பரிசளிக்கக் கூடாது என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒருவருக்கு நீங்கள் கைகுட்டையை பரிசாகக் கொடுப்பதால் அந்த உறவில் விரிசல் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. எனவே காதலர் தினத்தில் உங்கள் காதலிக்கோ அல்லது காதலனுக்கோ கைகுட்டை பரிசளிக்கப் போகிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை இப்போதே விட்டு விடுங்கள். 

2. கருப்பு நிற ஆடை: உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்றாலும், காதலர் தினத்தன்று கருப்பு நிற ஆடைகளை பரிசளிக்க வேண்டாம். ஏனெனில் கருப்பு நிறம் என்பது எதிர்மறையின் அடையாளமாகும். அதாவது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக மட்டுமே கருப்பு நிறத்தை பயன்படுத்துவார்கள். எனவே காதலர் தினத்தன்று ஒருபோதும் கருப்பு நிறத்தை அணியவோ அல்லது மற்றவர்களுக்கு பரிசளிக்கவோ வேண்டாம். 

3. தாஜ் மஹால்: என்னதான் தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருந்தாலும், அது ஒரு கல்லறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்லறை ஒரு உறவில் எதிர்மறை விஷயங்களை உருவாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், காதலர் தினத்திற்கு தாஜ்மஹாலை பரிசாகக் கொடுக்க வேண்டாம்.

4. செருப்பு/ஷூ: உங்களுடைய பார்ட்னருக்கு காதலர் தினத்தன்று ஒருபோதும் காலணிகளை பரிசாக வழங்கி விடாதீர்கள். காலணிகளுக்கு எதிர்மறை ஆற்றலை அதிகம் என சொல்லப்படுவதால், அதை பரிசாக வழங்கினால் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தி விரிசலை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. 

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT