window mesh https://m.indiamart.com
வீடு / குடும்பம்

வீட்டுக்கு அழகு தரும் 5 வகை ஜன்னல் திரைவலைகள்!

எஸ்.விஜயலட்சுமி

ன்னல் கதவுகளை திறந்து வைத்திருப்பது அறைக்குள் நல்ல காற்று வர வழிவகை செய்யும். ஆனால், அதே சமயத்தில் ஜன்னல்கள் திறந்திருக்கும்போது கொசுக்கள் மற்றும் சிறு சிறு பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு ஏதுவாகிவிடும். எனவே, ஜன்னல்களுக்கு பொருத்தமான வலைகள் (window mesh) அமைப்பது சிறந்தது. இந்தப் பதிவில் ஐந்து வகையான சிறந்த ஜன்னல் வலைகளைப் பற்றி பார்ப்போம்.

1. அலுமினிய வலைகள்: அலுமினிய வலைகள் உறுதியான மற்றும் வலுவானவை. நீண்ட காலம் செயல்படும். இவை குறைந்த எடையில் அமைந்திருக்கும். நன்கு நீடித்து உழைக்கக் கூடியது. காற்று மற்றும் சூரிய வெளிச்சம் இரண்டையும் உள்ளே வர வழி வகை செய்கிறது. அதே சமயத்தில் அலுமினியத் திரைவலைகளுக்கு குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் சுத்தம் தேவைப்படுகிறது. ஈரத்தின் காரணமாக இதில் துரு பிடிக்காது. அலுமினிய வலைகள் பொதுவாக பெரிதும் விரும்பப்படுகின்றன. பாரம்பரிய வெள்ளி அல்லது சார்க்கோல் ஃபினிஷிங் உடன் இவை வருகின்றன.

2. கண்ணாடியிழை திரை வலைகள் (Fiberglass mesh): இவை ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான மிகவும் விரும்பி அமைக்கப்படும் வலைகள் ஆகும். இவற்றின் வழியே காற்று சிறிது தடைப்பட்டு வரும். ஆனால். இவை பூச்சிகளை உள்ளே அனுமதிப்பதில்லை. இவற்றின் விலைகள் குறைவாக இருப்பதால் இவை பெரிதும் விரும்பப்படுகின்றன. மேலும், இவை புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்கின்றன. பெரும்பாலும் கருப்பு நிறத்தில் அமைந்திருப்பதாலும் பாதுகாப்பு பூச்சு இருப்பதாலும் குறைவான சூரிய ஒளி அறைக்குள் வர வழி வகுக்கிறது. எனவே, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. கோடைகாலத்திற்கு இந்த வகையான வலைகள் மிகவும் ஏற்றவை.

3. பாலியெஸ்டர் திரை வலைகள்: இந்த வகையான வலைகள் நீடித்து நிலைத்திருக்கும். இவை கண்ணாடியிழை வலைகளை விட விலை அதிகம் என்றாலும். நீடித்து உழைக்கக்கூடியவை. வினைல் பூச்சுடன் இவை தயாரிக்கப்படுவதால் இவற்றில் கீறல்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படுவது இல்லை. கண்ணாடி இழை வலைகளை விட பாலியெஸ்டர் வலைகள் தோராயமாக ஏழு மடங்கு வலிமையானவை. பூனை. நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் வீடுகளுக்கு ஏற்றது. ஏனென்றால் அவற்றின் கூரிய நகங்களால் இந்த வலைகளை கிழிக்கவோ சேதப்படுத்தவோ முடியாது.

4. துரு பிடிக்காத எஃகு ( Stainless Steel) திரை வலைகள்: வலிமையான உலோகம் ஒன்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த வலைகள் பெரும் சேதத்தை தாங்கி நிற்கும் வலிமை உடையவை. இவற்றில் கீறல்கள் மற்றும் அரிப்புகள் ஏற்படுவதில்லை. பல ஆண்டுகள் ஆனாலும் இவை உறுதியாக நீடித்து நிற்கும். துரு பிடிப்பதில்லை. இவற்றை ஜன்னல்களுக்கு அமைப்பதால் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. பூச்சிகள் மற்றும் கொசுக்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இவற்றின் வழியாக ஜன்னலுக்கு அப்பால் உள்ள வெளிப்புற காட்சிகளை துல்லியமாகப் பார்க்க முடியும்.

இவை கேஜ் மெஷ் மூலம் தயாரிக்கப்படுவதால் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த கனரக சாளர வலைகள் தேவையற்ற ஊடுருவல்களை தடுக்கிறது. சிறந்த பாதுகாப்புக்கு ஏற்றது.

5. செம்பு. வெண்கலம் & பித்தளை திரை வலைகள்: செம்பு, வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட மெஷ் திரைகள் நல்ல பயன்பாட்டிற்கு ஏற்றவை. கண்களை கவரும் வண்ணம் இருப்பதுடன் துரு பிடிக்காதவை, வலிமையானவை மற்றும் நீண்ட காலம் உழைக்கும் தன்மை உடையவை. பலவித வண்ணங்களில் பலவித டிசைன்களிலும் இவை கிடைக்கும். நல்ல காற்றோட்டமும் கிடைக்கும். வெளியில் இருந்து வரும் பூச்சிகளை தடுக்கும் பழைய கால வீடுகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

நமது வீடுகளுக்கு ஏற்ற வகையிலான ஜன்னலுக்கான வலைகளை தேர்ந்தெடுத்து பொருத்துவோம்.

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

SCROLL FOR NEXT