7 habits to learn to develop self-confidence! 
வீடு / குடும்பம்

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

ம.வசந்தி

வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாதது. தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடித்து வெற்றி பெற முடியும். அந்தத் தன்னம்பிக்கையை வளர்க்கும் 7 பழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. சுய பராமரிப்பு: போதுமான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற சுய பராமரிப்பில் நம்முடைய உடலை ரீசார்ஜ் செய்து உடல் மற்றும் மனதிற்கு முன்னுரிமை அளிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் முக்கிய பழக்கமாக அமைகிறது.

2. வளர்ச்சிக்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்: முதலில் நம்மை நம்புவது, அடுத்தபடியாக முயற்சி மற்றும் உறுதியான மனப்பான்மை மூலமாக எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்துடன் திடமாக நம்முடைய மனதை பழக்கப்படுத்த எப்பேர்ப்பட்ட தடைகள் வந்தாலும் தகர்த்து முன்னேறிச் செல்ல முடியும்.

3. பொருளாதார சுதந்திரம்: நல்ல பொருளாதார சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்வதால்  நம்முடைய இலக்குகள் அடிப்படையிலான விருப்பங்களை தேர்வு செய்வதால் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இல்லாமல் பொருளாதார சுதந்திரமாக இருக்க முடியும்.

4. டைம் மேனேஜ்மென்ட்: எப்பொழுதும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த ஒரு விஷயத்தையும் சரியான நேரத்தில் செய்வது தேவையற்ற மன அழுத்தத்தை குறைத்து, நம்முடைய இலக்குகளில் கவனம் செலுத்த உதவிகரமாக இருக்கும்.

5. எமோஷனல் இன்டலிஜென்ஸ்: எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்பது உறவுகளை வளர்ப்பதற்கு மிகவும் அவசியம் ஆகும். அதாவது, பல்வேறு உணர்வுகளை சமாளிக்க பிறருடைய இடத்திலிருந்து அவர்களைப் பற்றி யோசிக்கவும் அவசியம்.

6. தனிப்பட்ட வளர்ச்சிக்கான முதலீடு: தொடர்ந்து அதிவேகத்தில் வளர்ந்து வரும்  உலகத்தில் திறமைகளையும் அறிவு திறனையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான முதலீடாகப் பார்க்கப்படுவதோடு, வெற்றிக்கான முக்கியப் பழக்க வழக்கமாகும்.

7. வலிமையான நெட்வொர்க்: எப்பொழுதும் நம்மைச் சுற்றி புரொபஷனலான நெட்வொர்க் இருப்பதை உறுதி செய்வது தேவையான நேரத்தில் வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகள் மற்றும் ஆதரவை கொடுக்கிறது.

மேற்கூறிய 7 பழக்க வழக்கங்களை ஒருவர் கடைபிடிக்கும்போது தன்னம்பிக்கை வளர்ந்து வெற்றி பெற முடியும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

சிறுகதை: நரையும் நர்மதாவும்!

SCROLL FOR NEXT