Uruli vessel Img credit: amazon
வீடு / குடும்பம்

வீட்டில் ஒரே ஒரு உருளி மட்டும் இருந்தால்... என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

சங்கீதா

நம்மில் பலரும் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், கல்லூரி, போன்ற இடங்களில் உருளி வைத்திருப்பதை பார்த்திருப்போம். இந்த உருளியில் தண்ணீர் நிரப்பி அதில் பூக்கள் வைத்திருப்பார்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதை பார்க்கும் போது நேர்மறையான ஆற்றல் கிடைக்கும் என்பதால் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். நாம் இந்த பதிவில் உருளியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இதனால் என்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

உருளியின் பயன்கள்:

உருளி, ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப ஐம்பொன், தங்கம், வெள்ளி, பித்தளை, கண்ணாடி, மண் என பல வகைகளில் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் உருளியை வாங்கி வந்து அதில் நீர் நிரப்பி மலர்கள் மற்றும் சில பொருட்களை அதில் போட்டு வைத்தால் கண் திருஷ்டி விலகும்.

நம்மில் பலருக்கும் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நம் கைகளில் பணம் இல்லாமல், ஏதோ ஒரு செலவு வந்துக்கொண்டு இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் உருளியில் நீர் நிரப்பி மலர்களால் அலங்கரித்து பிரம்ம மூர்த்த நேரத்தில் உருளியின் நடுவில் ஒரு விளக்கொன்று ஏற்றி வைத்தால் மகாலட்சுமி கடாக்ஷம் ஏற்படும் என்பது ஐதீகம்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு சில சக்திகள் உண்டு. நாம் நினைக்கும் காரியம் நிறைவேற வேண்டும் என்றால் அதை நினைத்துக்கொண்டு ஒரு டம்ளர் நீர் பருகினால் அந்த விஷயம் நடைபெறும் என ஒரு சிலர் கூறுவார்கள். இதற்கு காரணம் நீரில் நேர்மறையான ஆற்றல் உள்ளதால் நமக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் என்பதே. இவ்வாறு சக்தி வாய்ந்த நீரை நாம் உருளியில் நிரப்புவதன் மூலம் அதை பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் விலகி, நேர்மறை ஆற்றலை நீர் கொடுக்கிறது.

வடகிழக்கு திசையில் உருளியை வைப்பதால் சகல செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் உருளியை வீட்டின் முற்றத்தில், ஹாலில் அல்லது வாசற்படியில் வைக்கலாம்.

நமக்கு நடக்கும் பல நிகழ்வுகளுக்கு காரணம் நம்முடைய எண்ணங்கள் தான். நம் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் நடக்கும் செயல்களும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். எனவே நாம் வசிக்கும் வீடு, தொழில் செய்யும் கடை போன்ற இடங்களில் இந்த உருளியை வைத்து தினமும் அதனை பார்ப்பதன் மூலம் நம் எண்ண ஓட்டங்களும் நன்றாக அமையும். இதனால் வியாபாரத்தில் நஷ்டம் இல்லாமல், வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

உருளியில் தினமும் நீர் மாற்ற வேண்டும். மேலும் உருளியில் வைக்கும் மலர்கள் வாடாமல் இருந்தால் மறுநாள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நீர் கட்டாயம் மாற்ற வேண்டும். மலர்களை பயன்படுத்தும் போது நறுமணம் உள்ள மலர்களை பயன்படுத்துவது சிறப்பு.

மேலும் உருளியில் உள்ள நீரில் ஒரு முழு எலுமிச்சை பழம் சேர்த்தால் கூடுதல் சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நறுமணத்திற்காக வெட்டி வேர் பயன்படுத்தலாம்.

உருளியில் மலர்களை உதிர்த்து போடக் கூடாது. காம்புடன் மலர்களை அதில் வைக்க வேண்டும்.

இவ்வாறு உருளியை பயன்படுத்தி வந்தால் நம்மை சுற்றி எப்போது நேர்மறையான சக்தி நிலவும் என்பது நம்பிக்கை.

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிஸ் ரவா லட்டு-ஓலை பகோடா செய்யலாம் வாங்க!

தொடர் தும்மல் அவஸ்தையைப் போக்க உதவும் மூலிகை டீ!

கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு என்ன தகுதி உள்ளது – சீமான்!

தவறு செய்வது தவறில்லை ஆனால்..!

News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!

SCROLL FOR NEXT