Bamboo furniture 
வீடு / குடும்பம்

மூங்கில் மரச்சாமான்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்!

ஆர்.ஐஸ்வர்யா

வீடு மற்றும் அலுவலகங்களில் மூங்கிலால் ஆன நாற்காலிகள், சோஃபாக்கள், டீப்பாய்கள் போன்ற மரச்சாமான்கள் அதன் நிலைத்தன்மை மற்றும் அழகியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில் மரச்சாமான்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மூங்கில் மரச்சாமான்களின் நன்மைகள்:

சூழல் நட்பு: மூங்கில், பூமியில் வேகமாக வளரும் தாவரங்களில் ஒன்றாகும்.  இது 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும்.  இது மிகவும் புதுப்பிக்கத்தக்க வளமாக அமைகிறது. அதன் சாகுபடிக்கு பூச்சிக்கொல்லிகள் அல்லது இரசாயனங்கள் தேவையில்லை. எனவே, இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும் பிற மரங்களை விட, மூங்கில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி,  35 சதவிகிதம் அதிக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

ஆயுள் மற்றும் வலிமை: மூங்கில் வியக்கத்தக்க வகையில் வலிமையானது.  பெரும்பாலும் ஓக் போன்ற கடின மரங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இது அதன் இழுவிசை, வலிமை மற்றும் மீள்தன்மைக்கு பெயர் பெற்றது. மூங்கில் மரச்சாமான்கள் முறையாக பராமரிக்கப்படும்போது நீடித்து உழைக்கக் கூடியதாதாகவும் இருக்கும்.

இலகு ரகம்: மூங்கில் வலிமையாக இருந்தாலும், பாரம்பரிய மரங்களுடன் ஒப்பிடும்போது இலகு ரகமாக, அதன்  தளபாடங்கள் நகர்த்துவதற்கும் கையாளுவதற்கும் எளிதானது. அதன் வலிமையையும் உறுதியையும் சரியாக பராமரிக்கும்போது மறுசீரமைப்பதையும் எளிதாக்குகிறது.

அழகியல்: மூங்கில் மரச்சாமான்கள் ஒரு நேர்த்தியான அமைப்பைக் கொண்ட இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளன. நவீனமானது முதல் பழைமையான அலங்கார டிசைன்கள் வரை பல்வேறு பாணிகளில் கிடைக்கிறது. அதன் வடிவமும் அமைப்பும் அதன் அழகைக் கூட்டுகின்றன.

பல்துறை வடிவமைப்பு: இது பாரம்பரியம் முதல் சமகாலம் வரை பல்வேறு பாணிகளில் வடிவமைக்கப்படலாம். எந்த இடத்திலும் ஒரு சூடான, மண் அதிர்வைச் சேர்க்கிறது.

ஈரப்பத எதிர்ப்பு: மூங்கில் ஈரப்பதத்திற்கு இயற்கையான எதிர்ப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக, மரச்சாமான்கள் ஈரம் பட்டால், சிதைவதற்கான வாய்ப்பு அதிகம். ஈரம்பட்ட மரச்சாமான்கள் விரைவில் உளுத்துப் போகும். ஆனால், மூங்கில் மரச்சாமான்கள், கதவுகள், குளியலறைகள் போன்ற அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில் கூட பொருத்தமான தேர்வாக அமைகிறது. ஈரப்பதமான சூழலில் இவை சிதைவதற்கு அல்லது விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பூச்சி - எதிர்ப்பு: மரச்சாமான்கள் பூச்சி அரிப்பினால் சேதமாகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், மூங்கில் அதன் கடினத்தன்மை மற்றும் சிலிக்கா உள்ளடக்கம் காரணமாக இயற்கையாக பூச்சிகள் மற்றும் கரையான்களை எதிர்க்கிறது.

குறைந்த செலவு: மூங்கில் மரச்சாமான்கள் அதன் மிகுதி மற்றும் விரைவான வளர்ச்சி சுழற்சி காரணமாக பாரம்பரிய கடின மரச்சாமான்களை விட பெரும்பாலும் செலவு குறைந்ததாக இருக்கும்.

குறைந்த பராமரிப்பு: இதற்கு குறைந்தபட்ச கவனிப்பு மட்டுமே தேவைப்படுகிறது. பொதுவாக இதில் படிந்துள்ள தூசியைத் தட்ட ஒரு ஈர துணியை வைத்து வழக்கமான சுத்தம் செய்தாலே அழகாக இருக்கும். லேசாக சோப்பு மற்றும் தண்ணீருடன் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

மக்கும் தன்மை: செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட நாற்காலிகள், சோபாக்கள் மிகவும் பழசாகி அல்லது சேதமடையும்போது, அவற்றை குப்பையில் வீசி எறிவார்கள். அவை பூமியின் நிலப்பரப்பில் சேதத்தை உண்டாக்கி, மண் வளத்தை அரித்து, மக்கிப்போக பல ஆண்டுகள் ஆகும். ஆனால், மூங்கில் மரச்சாமான்கள் அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவில் மக்கும் தன்மை கொண்டவை. அதன் கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கின்றன.

மூங்கில் மரச்சாமான்கள் ஏராளமான சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் நன்மைகளை வழங்குகிறது. ஆனால், எளிதில் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான கவனிப்பும், பராமரிப்பும் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்.  இது வீட்டு அலங்காரங்களுக்கு நிலையான மற்றும் ஸ்டைலான தேர்வாக இருக்கும்.

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

SCROLL FOR NEXT