Children who feel lonely. 
வீடு / குடும்பம்

தனிமை உணர்வை அனுபவிக்கும் பிள்ளைகள்… பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? 

கிரி கணபதி

நவீன உலகில் பிள்ளைகள் பல மணி நேரம் தனியாக வீட்டில் இருந்து டிவி, மொபைல்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் மூழ்கி இருப்பது சகஜமாகிவிட்டது. இதனால் அவர்களுக்கு தனிமை உணர்வு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தனிமை உணர்வு, பிள்ளைகளின் மனநலம் மற்றும் சமூக திறன்களை பாதிக்கக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சனையாகும். இந்தப் பதிவில் பிள்ளைகளுக்கு தனிமை உணர்வு வராமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

தனிமை உணர்வின் அறிகுறிகள்: 

  • பிள்ளைகள் தனிமையாக இருக்கும் போது சோகமாக அல்லது மனச்சோர்வுடன் காணப்படுவார்கள். 

  • நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிட விரும்ப மாட்டார்கள். 

  • எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். 

  • இரவில் சரியாக தூங்க மாட்டார்கள் அல்லது எப்போதும் அதிகமாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். 

  • உணவு உட்கொள்ள மாட்டார்கள் அல்லது அதிக அளவு உணவு சாப்பிடுவார்கள். 

  • எதிலும் முறையாக கவனம் செலுத்த முடியாமல் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்.

தனிமை உணர்வைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை: 

  • தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் அவர்களுக்கு பிடித்தமான செயல்களை செய்யுங்கள். 

  • அவர்களின் கனவுகள் இலக்குகளை ஊக்குவித்து, அவர்களது தோல்விகளில் ஆறுதலாக இருங்கள். 

  • நீங்கள் எப்போதும் தனியாக இருந்தால் உங்கள் பிள்ளைகளும் அதையே செய்வார்கள். எனவே நண்பர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். 

  • நண்பர்களை எப்படி உருவாக்குவது? சமூகத்துடன் எப்படி தொடர்பு கொள்வது? போன்றவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். 

  • புத்தகம் படித்தல் விளையாட்டு இசை ஓவியம் போன்ற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை செய்ய அவர்களை ஊக்குவிக்கவும். 

  • ஒருவேளை உங்களது பிள்ளையின் தனிமை உணர்வு கடுமையாக இருந்தால், உடனடியாக ஒரு மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள். 

பிள்ளைகளுக்கு தனிமை உணர்வு வராமல் இருப்பது அவர்களின் மனநலம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலமும், அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதன் மூலமும் தனிமை உணர்வை தடுக்க முடியும். எனவே, ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. 

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT