ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஜாதகம் அறியாமலும் கல்லை அணிந்து கொள்வதால் – ஒரு சமயம் கல் வாழ்வின் உயர்ந்த நிலைக்கும் தூக்கி விடலாம். தாழ்த்தியும் விடலாம்.
பொதுவாக நவரத்தினக் கற்கள் ஒவ்வொன்றில் உள்ள சிறப்பம்சங்களையும் இங்கு பார்க்கலாம்.
ரூபி:
செயலாக்கம் கொடுக்கும் திட நம்பிக்கை தரும். எடுக்கும் காரியம் சாதனை பெரும் புகழ் வரும். கெளரவம் கிடைக்கும். நேர்மை, மேன்மை இராஜ விசுவாசம் சேரும். அகத்தை இறுமாப்பு இவைகள் அகலும். தைரியமும் அதிர்ஷ்டமும் ஏற்படும்.
முத்து:
வீணான எண்ணங்கள் ஒழிந்து கற்பனா சக்தி ஏற்படும். கற்பனையை செயல்வடிவம் ஆக்க முடியும். நல்ல பயணம் உண்டாகும். இரக்க சிந்தனை உண்டாகும். செலவு செய்யும் சிந்தனை பெறும். எந்த விஷயத்திலேயும் திடமான, திட்டமிட்ட முடிவு ஏற்படும்.
பவளம்:
எதையும் வெளிப்படையாக பேச வைக்கும். மற்றவர்களை வழி நடத்த உதவும். வெளி வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். விளையாட்டு, ராணுவம் போன்றவற்றில் வாய்ப்புகள் கிட்டும். அநாகரீகமான, கொடூரமான அழிக்கக்கூடிய, சிந்தனைகளை ஒழித்துப் பொறுமையோடு, நேர்மை நம்பிக்கையோடு, விவேகமான நம்பகமான பெயரைப் பெற்றுத் தரும்.
மரகதப்பச்சை:
முன்யோசனையோடு நடக்க முடியும். எதையும், எளிதில் சிந்தித்து திறமையாக பேசி அழகாக வெளிப்படுத்தத் தெரிந்த பேச்சாளராக மாறுவர். வியாபாரத்திற்கு ஏற்ற கல். வியாபாரத்துக்கான தந்திரமான சாதுர்யம் கிடைக்கும்.
கனகபுஷ்பராகம்:
யாருக்கும் நல்ல சினேகிதராவார்கள். தாராள மனம் இருக்கும். எதையும் உயர்வான நோக்கத்தோடு பார்க்க இயலும். பெரும்பாலோர் இவர்களோடு ஒத்துழைப்பார்கள். மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பழக முடியும். மற்றவர்களுக்காக இரக்கமும் – சிரத்தையும் கொண்டு செயல்பட வைக்கும்.
வைரம்:
கனிவு தரும். எதிலும் இணங்கிப் போவார்கள். மகிழ்ச்சியோடு, வசதியும் வசீகரமும் வரும். எதிலும் எச்சரிக்கை ஏற்படும். சோம்பேறித்தனம் அகலும். எல்லாரிடமும் சிநேகிதமாக பழக முடியும். ஆடம்பர நாட்டம் அதிகம் ஏற்படும்.
நீலம்:
பாண்டித்யம் விஞ்ஞான ரீதியான விஷயங்களில் ஞானம் ஏற்படும். எதிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வைக்கும். காரிய சிரமம், அமைதியான அதிபுத்திசாலித்தனம் தெரியும்.