Mulligan Try in office 
வீடு / குடும்பம்

அன்றாட வாழ்க்கையில் பயன் தரும் முல்லிகன் முயற்சி பற்றித் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

முல்லிகன் முயற்சி (Mulligan Try) என்பது கோல்ஃப் விளையாட்டிலும், ரக்பி விளையாட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். லேசான விதி மீறல்களுக்கு உள்ளான அணிக்கு முல்லிகன் முயற்சி தரப்படுகிறது. அதாவது அவர்களுக்கு விளையாட இன்னொரு சந்தர்ப்பம் தரப்படுகிறது. இது அன்றாட வாழ்வியலில் எப்படிப் பயன்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அன்றாட வாழ்க்கையில் முல்லியன் முயற்சி பயன்படுத்தப்படும் விதங்கள்:

வேலையில் ஏற்படும் தவறுகள்: ஒரு நிறுவனத்தில் அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் வேலையில் ஒருமுறை தவறு செய்தால் முல்லிகன் முயற்சி பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக கணக்காளர் ஒருவர் ஒருமுறை கூட்டலில் அல்லது கழித்தலில் தவறு செய்யும்போது, அபராதம் எதுவும் விதிக்காமல் அல்லது தண்டனை தராமல் அவரது முதலாளி அவரை மீண்டும் வேலை செய்ய அனுமதிப்பதைக் குறிக்கிறது. ஒரு தடவை தவறு நேர்ந்து விட்டது, மீண்டும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிற எச்சரிக்கையோடு அவரை விட்டு விடுவார்கள்.

தேர்வுகள்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது சரியாக எழுதவில்லை என்றால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவதைக் குறிக்கிறது. அதாவது, இன்டர்னல்கள் எனப்படும் உள்ளீட்டு தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களுக்கு மறுமுறை தேர்வு வைத்து மதிப்பெண்களை கணக்கில் எடுப்பதைக் குறிக்கிறது. வினாடி வினா போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது.

சமையலில் முல்லிகன் முயற்சி: சமையலறையில் புதிதாக ஒரு டிஷ் தயார் செய்யும்போது அல்லது வழக்கமான சமையலில் அதிகமாக உப்பு அல்லது காரம் கூடிப்போவது போன்ற தவறுகள் நேரலாம். அப்போது முல்லிகன் முயற்சி அனுமதிக்கப்படுகிறது. பெண்கள் எப்போதுமே சமையலில் தவறு செய்யும் வழக்கமுடையவர்கள் அல்ல. அபூர்வமான தவறை சரி செய்ய வீட்டில் உள்ளவர்கள் அனுமதிக்கிறார்கள்.

தனிப்பட்ட இலக்குகள்: புத்தாண்டு சமயத்தில் பலரும் இலக்குகள் நிர்ணயித்து தீர்மானங்களை எடுப்பார்கள். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜாகிங் போவது, வாக்கிங் போவது, தினமும் புத்தகம் படிப்பது, புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வது என்பது போல பல தீர்மானங்களை எடுத்துக் கொள்வார்கள். தினமும் வாக்கிங் போகும் நபர்கள் எதாவது ஒரு நாள் அல்லது சில நாட்கள் போகாவிட்டால், அவர்கள் முல்லிகன் முயற்சி எடுக்கலாம். அடுத்த வாரத்தில் இருந்து புதிதாக வாக்கிங் தொடங்கலாம்.

உறவுகள்: கணவன், மனைவி அல்லது உறவினர்களுக்குள் அல்லது நண்பர்களுக்குள் சிறிய தவறான புரிதல் அல்லது வாக்குவாதம் ஏற்பட்டு, காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டு பின் அவர்கள் மன்னிப்பு கேட்டால் அங்கே முல்லிகன் முயற்சியைப் புகுத்தலாம். இரு சாராரும் தாங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அதை மறந்து விட்டு முன்பு போல பழகலாம் என்று கூறி சமாதானம் அடையலாம். அடிக்கடி இதுபோல செய்ய முடியாது ஏதாவது ஒன்றிரண்டு முறை என்றால் மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

விளையாட்டுக்கள்: நண்பர்களுடன் சாதாரணமாக விளையாடும் விளையாட்டுக்களில் ஏதாவது தவறுகள் நேர்ந்து விட்டால், மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு வாய்ப்பு தரலாம். அவர்கள் செய்த தவறை மன்னித்து விடலாம். எனவே முல்லிகன் என்பது இரண்டாவது வாய்ப்பு அல்லது கடுமையான விளைவுகளை எதிர் கொள்ளாமல் ஏதாவது ஒன்றை சரி செய்யும் வாய்ப்பை தருகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நல்ல பலனைத் தருகிறது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT