Do you know what are the five types of foods that should be eaten to lose weight? https://www.chefkunalkapur.com
வீடு / குடும்பம்

உடல் எடை குறைய உண்ண வேண்டிய ஐந்து வகை உணவுகள் என்னென்ன தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

டல் எடையை நார்மலான அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்னைகளில் முன்னணியில் நிற்பவை இதய நோய்களும் ஒபிசிட்டியும் ஆகும். இவற்றிலிருந்து விடுபட்டு, எடையை சமநிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள், உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடுமே ஆகும்.

உணவுக் கட்டுப்பாட்டில், சில வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது, சிலவற்றை குறைத்து உண்பது போன்ற சில விதிமுறைகளெல்லாம் உண்டு. எந்த நேரமும் உண்ணத்தக்க, குறைந்த கலோரியுடன், சுவையும் சத்துக்களும் நிறைந்த ஐந்து வகை தென்னிந்திய உணவுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஊற வைத்து அரைத்த அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு கலவையை சுமார் பத்து மணி நேரம் நொதிக்கச் செய்து, பிறகு அதில் தோசை செய்து சட்னி சாம்பாருடன் உண்ணும்போது குறைந்த கலோரியுடன் அதிக சத்துள்ள உணவு உண்ட திருப்தி கிடைக்கும்.

இதே மாவை உபயோகித்து ஆவியில் இட்லிகளாக செய்து சாம்பாருடன் சாப்பிடும்போது, கலோரி அளவு மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது.

இதே மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இன்னொரு உணவானது சுவை நிறைந்த ஊத்தப்பம். தோசை வடிவில் மாவை ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை டாப்பிங்ஸ்ஸாக தூவி சுட்டெடுத்து, சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதும் ஆரோக்கியம் கூட்டுவதாகும்.

வேகவைத்த பருப்புடன் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்பைஸியான, சத்து மிக்க சாம்பாரானது தென்னிந்தியாவின் அனைத்து உணவகங்கள் மற்றும் வீடுகளிலும் தினசரி சமைக்கப்பட்டு சாதத்தோடும் டிபன் வகையறாக்களோடும் சேர்த்து உண்ண வழங்கப்படுகிறது.

அடுத்து வருவது, கடுகு, கறிவேப்பிலை, காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் ரவா உப்புமா. அதிக சத்துக்களும் குறைந்த கலோரியும் கொண்டது; நீண்ட நேரம் பசியேற்படாமல் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருவது.

எடை குறைப்பை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் மேற்கூறிய உணவு வகைகளை அடிக்கடி உண்டு வருவது அதிக நன்மை தரும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT