Good benefits of fragrant flowers 
வீடு / குடும்பம்

நறுமண மலர்கள் தரும் நல்ல பலன்கள்!

சேலம் சுபா

ற்காலத்தில் மறைந்து வரும் பாரம்பரியங்களில் ஒன்று மலர்களை அணிவது. அன்று பெண்கள் தினமும் நறுமணம் தரும் பூக்களை தலையில் சூடி அழகு சேர்த்தனர். நாகரிகம் பெருகப் பெருக நீளமான கூந்தலும் குறைந்து குட்டை முடியானதுடன், பூக்கள் வைப்பதையும் பெண்கள் விரும்புவதில்லை. மணம்  வீசும் மலர்களில் உள்ள பலன்களை அறிந்தால் நிச்சயம் நாம் அதை தவிர்க்க மாட்டோம். வழிபாடுகளில் மலருக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. காரணம், இறைவளை தரிசிக்கும் வேளையில் அங்கு வீசும் மலர்களின் நறுமணம் நம் மனதை அமைதிப்படுத்துவதை உணரந்திருப்போம்.

வெறும் அழகுக்கு மட்டுமல்ல மலர்கள். ஏராளமான மகத்துவம் அடங்கி உள்ள மலர்களுக்கு  இயற்கையாகவே ஈரத்தை உறிஞ்சும் தன்மை உண்டு என்பதால் நம் கூந்தலில் உள்ள அதிகப்படியான ஈரத்தை அகற்ற உதவுகிறது. தற்சமயம் பெண்கள் தலைக்குக் குளித்தவுடன் உபயோகிக்கும் ஹேர் ட்ரையர் பலவித பின்விளைவுகளைத் தரும். தற்போது மலர் மருத்துவ முறை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அழகுக்காகவும் ஆராதனைக்காகவும் மட்டுமல்ல பூக்கள், ஆரோக்கியம் காக்கும் மருந்துகளாக ஆயுர்வேதம் மற்றும் யுனானி வைத்திய முறைகளில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

உதாரணமாக, மல்லிகைப் பூ அணிவதால் தம்பதிகளிடையே உணர்வுகளைத் தூண்டி இல்லறத்தில் ஆர்வத்தை அளிக்கும். மேலும் இது உடலின் சூட்டைப் போக்கும் தன்மை கொண்டது. களைப்பை நீக்கி புத்துணர்வு தரும் மலர்களில் மல்லிகைப் பூ சிறப்பானது. வாந்தி வரும் உணர்வு ஏற்படும்போது பன்னீர்ப்  பூக்களை முகர்ந்தால் வாந்தி வரும் உணர்வு தடைபடும். ரோஜா மலர் அழகின் அடையாளமாக உள்ளது.

ரோஜா மலரின் இதழ்கள் குடல் புண், வாய்ப் புண், தொண்டைப் புண் போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த மலர்களில் தயாரிக்கப் படும் குல்கந்து இரத்த சுத்திகரிப்புக்கும் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கும் நிவாரணம் தருகிறது. மருதாணிப் பூக்களை தூங்கச் செல்லும் முன் தலையிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

நறுமணமிக்க மகிழம் பூக்களை காய்ந்த பின் அவற்றைப் பொடியாக்கி சுவாசித்தால் தலையில் கோர்க்கும் நீர் வெளியேறி தலைபாரம் நீங்கும். தாழம்பூ கேள்விப்பட்டு இருப்பீர்கள். வாதம், கபம், மேக பாதிப்புகளுக்கு சிறந்தது என மருத்துவக் களஞ்சியம் சொல்கிறது.

இப்படிப் பல வகையான மலர்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்து இருக்கின்றன. மலர்களைப் பயன்படுத்தும்போது இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தூக்கமின்மை, உணவுக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி, உளவியல் மாற்றங்களால் ஏற்படும் பிரச்னைகள் போன்ற பலவற்றிலிருந்து விடுபடலாம்.

மலர்களால் தயாரிக்கப்படும் மருந்துகள் பயம், கோபம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்குவதில் சிறந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனம் குழப்பத்தில் உள்ளபோது நல்ல மணம் கொண்ட பூக்களை ஆழ்ந்து சுவாசித்தால் ஒரு புத்துணர்வு நிச்சயம் கிடைக்கும். மலர்களின் மகத்துவம் அறிந்து அவற்றைப் பயன்படுத்தி நன்மைகள் பெறுவோம்.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT