Helmet 
வீடு / குடும்பம்

தலை கவசம் நம் உயிர் கவசம்!

A.N.ராகுல்

‘ஹெல்மெட்’ – ஒவ்வொரு இரு சக்கரவாகன ஓட்டியம் தங்கள் தலையை மட்டுமல்லாது, உயிரையுமே பாதுகாக்க அவசியம் அணிய வேண்டிய கவசமாகும். இந்த ஹெல்மெட்டுகள் வெவ்வேறு பயண நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில், பல வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1. ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் (Full-Face Helmets)

ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட், சவாரி செய்பவரின் முகம் மற்றும் தலையை உள்ளடக்கிய விரிவான கவரேஜை வழங்குகிறது. கடுமையான காயங்களிலிருந்து பாதுகாக்கும் திறன் காரணமாக இது மிகவும் பாதுகாப்பான வகை ஹெல்மெட்டாகக் கருதப்படுகிறது. விபத்துகளின்போது கன்னம் மற்றும் தாடையைக் கவசம்போல பாதுகாக்கும். இந்த ஹெல்மெட்டுகள் மழை, காற்று மற்றும் வெளிப்புற சத்தத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. நீங்கள் ஒரு நீண்ட பயணத்தில் இருந்தாலும் அல்லது தினசரி பயணமாக இருந்தாலும், முழு முக தலைக்கவசம் உகந்த தலை பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த ஹெல்மெட்டை அணிவதால், சில ரைடர்கள் மூச்சுத் திணறலை உணரலாம், ஆகையால் அவரவர்களின் தலையின் அளவை பொருத்து வாங்கிக்கொள்ளுங்கள். சில சிரமங்கள் இருந்தாலும் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் இல்லையா?

2. திறந்த முக தலைக்கவசங்கள் (Half-Face)

பெயர் குறிப்பிடுவதுபோல, திறந்த முக ஹெல்மெட்கள் தலை, நெற்றி மற்றும் காதுகளை மட்டுமே மறைக்கும். அவை லேசானவை. குறிப்பாக குறுகிய பயணங்களுக்கு ஏற்றவை. இருப்பினும், சவாரி செய்பவரின் கன்னம் மற்றும் தாடையைப் பாதுகாக்காததால் இரண்டாம் பட்ச தேர்வாக இருப்பது நல்லது. நகரவாசிகள் மத்தியில் பிரபலமான இந்த ஹெல்மெட்கள் அதிக போக்குவரத்து மற்றும் வெப்பமான காலநிலையில் வசதியாக இருக்கும். அவை பொதுவாக குறைந்த வேக ஸ்கூட்டர், E- ஸ்கூட்டர் ஓட்டுனர்களால் பயன்படுத்தப்படுகிறது.

3. மாடுலர் ஹெல்மெட்கள் (Modular Helmets)

மாடுலர் ஹெல்மெட்கள் முழு முகம் மற்றும் திறந்த முக தலைக்கவசங்களின் அம்சங்களை இணைக்கின்றன. இவை ஃபிளிப்-அப் ஹெல்மெட்டுகள்(flip-up helmets) என்றும் அழைக்கப்படும். திறந்த முக ஹெல்மெட் போன்ற உணர்வை பெற, நீங்கள் விரும்பும் போது கன்னம் மற்றும் முகப்பு பகுதியை மடக்கிக்கொள்ள முடியும். ஃபுல்-ஃபேஸ்

ஹெல்மெட்டுகளைப் போன்ற பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,ஹெல்மெட்டில் தாடை பகுதியை மடக்க ஒரு வசதி (hinge mechanism for the chin guard) பொறுத்தப்பட்டிருப்பதால் அவை சற்று கனமாக இருக்கும். ஓபன்-ஃபேஸ் ஹெல்மெட்டுகளைவிட விலை அதிகம் என்றாலும், பிரீமியம் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களை(premium full-face helmets)விட அவை இன்னும் மலிவு விலையில் உள்ளன. சாகச பைக் ஓட்டுபவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீண்ட தூரப் பயணிகள் பெரும்பாலும் மாடுலர் ஹெல்மெட்களை விரும்புவார்கள்.

4. அரை-ஷெல் ஹெல்மெட்டுகள்(Half-Shell Helmets)

அரை-ஷெல் ஹெல்மெட்கள் குறைந்தபட்ச கவரேஜை வழங்குகின்றன, பொதுவாக தலையின் மேற்பகுதியை மட்டுமே மறைக்கும். க்ரூஸர் ரைடு போகிறவர்கள்தான் இதை பெரும்பாலும் அணிவார்கள். அதிகபட்ச பாதுகாப்பைவிட ஸ்டைலுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் மத்தியில் இது பிரபலமாக உள்ளது. இருப்பினும், அவை கன்னம் மற்றும் முகப் பாதுகாப்பு இல்லாததால், விபத்துகளின்போது அவற்றின் பாதுகாப்பு தன்மை குறைவு. அரை-ஷெல் ஹெல்மெட்களைத் தேர்ந்தெடுக்கும் ரைடர்கள் ஸ்டைலுக்கும் பாதுகாப்பிற்கும் இடையிலான புரிதலை நன்கு அறிந்து முடிவு செய்ய வேண்டும்.

5. ஆஃப்-ரோடு ஹெல்மெட்டுகள் (Off-Road Helmets)

ஆஃப்-ரோடு ஹெல்மெட்டுகள் டர்ட் பைக்கிங்(dirt biking), மோட்டோகிராஸ்(motocross) மற்றும் பிற ஆஃப்-ரோட்(off-road ) சாகசங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை நீட்டிக்கப்பட்ட கன்னம் பட்டைகள்(extended chin bars) மற்றும் சன் விசர்களுடன்(sun visors) என்று ஒரு தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன. இந்த ஹெல்மெட்கள் காற்றோட்டம் மற்றும் பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருப்பதால், அவை தீவிர உடல் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. காரணம் ஆஃப்-ரோடு ரைடர்ஸ் கூடுதல் காற்றோட்டம் இருப்பதை பெரும்பாலும் விரும்புவார்கள்.

6. இரட்டை விளையாட்டு ஹெல்மெட்டுகள் (Dual-Sport Helmets)

டூயல்-ஸ்போர்ட் ஹெல்மெட்கள் ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோட் ரைடிங்கிற்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன. முழு முகம் மற்றும் ஆஃப்-ரோடு ஹெல்மெட்களின் அம்சங்களின் கலவையைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டூயல்-ஸ்போர்ட் ரைடர்ஸ் ஹெல்மெட்களை மாற்றாமலே மெயின் ரோடு சவாரி மற்றும் ஆஃப்-ரோட் பாதைகளுக்கு இடையில் தங்களை எந்த ஒரு கஷ்டமும் இன்றி சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT