IQ அதிகமுள்ளவர்கள் பிறரால் மிகவும் வியந்து பார்க்கப்படுவார்கள். இந்தப் பதிவில் ஐ.க்யூ. லெவல் அதிக உள்ளவர்களுடைய குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.
1. அனுதாப குணம்: இவர்கள் பிறருடைய தேவைகள், உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொண்டு அவர்கள் மீது அனுதாபம் காட்டுவார்கள். மனிதர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்கள் இவர்கள்.
2. தனிமை விரும்பிகள்: இவர்கள் பொதுவாக தனிமையை விரும்பக் கூடியவர்கள். தனியாக இருக்கும்போது தங்களுடைய ஆற்றல் அதிகரிப்பதாக உணர்வார்கள். எனவே. அதிக நேரம் தனிமையில் இருப்பார்கள். இவர்கள் தனக்குத்தானே அடிக்கடி பேசிக்கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
3. பன்மொழி வித்தகர்: நிறைய மொழிகள் தெரிந்திருக்கும். பிறருடன் எளிதாக தொடர்பு கொள்வதற்கு பல மொழிகள் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்.
4. தன் உணர்வு மிக்கவர்கள்: இவர்கள் தன்னைப் பற்றி மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வார்கள். சுயமரியாதை அதிகமாக இருக்கும். அதேபோல தன்னுடைய விருப்பங்கள் மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
5. அறிவதில் ஆர்வம்: புதிய விஷயங்களை எப்போதும் தேடித்தேடி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். எவ்வளவு அறிந்து கொண்டாலும் இன்னும் இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
6. கவனிக்கும் தன்மை: இவர்கள் எதையும் உற்றுக் கவனிக்கும் தன்மை படைத்தவர்கள். சுற்றிலும் நடப்பவற்றை கவனிப்பது, பிறர் பேசுவதையும் உற்றுக் கவனிப்பார்கள்.
7. படைப்பாற்றல்: ஐக்யூ லெவல் அதிகம் உள்ளவர்களுக்கு படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். இவர்கள் மூளையின் எதிர்ப்புறத்தால் கண்ட்ரோல் செய்யப்படுவதால் இவர்கள் அதிகமாகப் படைப்பாற்றலில் ஈடுபடுவார்கள். தங்களுடைய இலக்குகளை அடைய தீவிரமாக உழைக்கும் அதே நேரத்தில் எழுதுதல், வரைதல் போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.
8. கவலைப்படுதல்: அதிக புத்திசாலியாக இருப்பவர்கள் குடும்பம், நட்பு, பணி குறித்து கவலைப்படுவார்கள். இது எதிர்மறை குணம் அல்ல. கவலைப்படுவதன் மூலம் தங்கள் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள். மேலும், உறவுகளை, நட்புகளையும் சிறந்த முறையில் கையாள்வார்கள்.
9. குழப்பமான சுற்றுப்புறம்: இவர்களுடைய சுற்றுப்புறம் எப்போதும் குழப்பம் மிகுந்ததாக இருக்கும். பொருட்களை கலைத்துப் போட்டிருப்பார்கள். அவற்றை எடுத்து வைப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
10. பணிவு: அதிகமான புத்திசாலிகள் எப்போதும் பணிவாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையில் நிறைய சாதித்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பார்கள்.
11. வாசிப்பு: அதிகமாக புத்தகங்களை வாசிப்பார்கள். புத்தகங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டே இருப்பதால் அறிவுத்திறனும் அதிகரிக்கிறது.
12. உணர்ச்சி நுண்ணறிவு: தங்களுடைய உணர்வுகளை மிக அழகாக கையாளத் தெரிந்தவர்கள். இவர்கள் கோபம், ஆத்திரம். அழுகை போன்றவற்றை மிகச் சரியாக கையாள்வார்கள். தன்னுடைய உணர்வுகளை சட்டென வெளிப்படுத்த மாட்டார்கள்.
13. துணிச்சல்: சவால்களை எதிர்கொள்ளும் திறன்மிக்கவர்கள். எதற்கும் அஞ்சி பின்வாங்க மாட்டார்கள். தங்களுடைய காரியத்தில் உறுதியாக இருந்து தைரியமாக சவால்களை எதிர்கொள்கிறார்கள். புதிய சூழ்நிலையில் தங்களை மிக எளிதாக பொறுத்திக் கொள்வார்கள்.
14. சிந்தனை: வித்தியாசமாக சிந்திப்பார்கள். எப்போதும் ஒரே கோணத்தில் சிந்திக்காமல், ‘அவுட் ஆப் தி பாக்ஸ்’ என்கிற ரீதியில் மிகவும் ஸ்மார்ட் ஆக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். வேடிக்கைகள் மற்றும் கேளிக்கைகளை விரும்புபவர்களாக இருப்பார்கள்.
15. இரவில் சுறுசுறுப்பு: இவர்கள் இரவு ஆந்தைகளைப் போல இரவில் கண் விழித்து வேலை செய்வதை மிகவும் விரும்புவார்கள். பகலில் விட இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.