வீடு / குடும்பம்

மகிழ்ச்சி தரும் மன நலம் பேணல்!

மும்பை மீனலதா

ழலை, இளமை, முதுமையெனக் கூறப்படும் மூவகைப் பருவங்களில், மழலையும், இளமையும் இனிதாகச் செல்லும். முயற்சி செய்தால், முதுமையையும் இளமையாக்கலாம். எவ்வாறு...?

முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

உணவுக் கட்டுப்பாடும், தேவையான உடற்பயிற்சியோடு சத்துள்ள உணவைத் தேர்ந்து சாப்பிடுவதும் முக்கியமானதாகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம். குறைந்தபட்சம் இரு வருடங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தினமும் 8 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில், எலுமிச்சை சாறு கலந்த நீரை நாளொன்றுக்கு 2 முறை குடித்துவர மயக்கம், தலைசுற்றலைத் தவிர்க்கலாம். முதுமையில் மன நலம் பேணுதல் முக்கியமானது. தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் மனதை ஈடுபடுத்திச் சோர்வை அகற்றிக்கொள்ள வேண்டும்.

‘இந்தக் கிழங்களே இப்படித்தான்! சும்மா முணுமுணுன்னு’ என்று இளசுகள் நினைக்க, ‘இந்தப் பொடிப் பயலுக்கு என்ன தெரியும்?’ என முதுமை நினைக்க, தலைமுறைப் போராட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடுகின்றன. இளசுகளின் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்புக் கொடுத்தும், உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தும், அவர்களது எல்லைகளை வரையறுத்தும் சக்தியை எடை போட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். கெளரவப் போர்களைக் குறைத்துக்கொண்டால், மனது சங்கடப்படாது.

‘பணம் இல்லையேல் பிணம்’ என்பது போல, முதுமைக்கு பணமும் தேவை. இளமைப் பருவத்தில் சிறிதளவாவது பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டால், முதுமையில் அது கைகொடுக்கும்.

உடல் - உள்ளம் - உணவுக் கட்டுப்பாடு, உடல் நோய் தவிர்த்து ஊக்கமளித்து, உற்சாகமாய் வைக்கும் முதுமையை!

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT