மார்கழி மாதம் பிறந்தாலே மக்களுக்குக் கொண்டாட்டம்தான். காரணம், குளிர்ந்த தட்பவெப்பம். ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைவரும் மகிழும் மாதமாகிறது மார்கழி. மார்கழி விடியற்காலையில் எழுவதும் உடற்பயிற்சிகள் செய்வதும் அவசியம் என்று வலியுறுத்தி அதற்கான வழிமுறைகளையும் வகுத்துச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். மார்கழி மாதம் ஏன் அதிக சிறப்பு பெறுகிறது?
ஓசோன் படலம் என்பது பூமிக்கு மேல் சில கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படும் இலகுவாக சிதையும் தன்மை கொண்டது. சூரியனின் தீங்கான புற ஊதா கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்தும் ஒரு படலமே ஓசோன் எனப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக தாக்கும்போது பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகும். அந்தக் கதிர்வீச்சில் இருந்து பூமியைக் காப்பது, பூமியின் வான் மண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு என்பது 1913ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக, ஓசோன் படலத்தில் ஏற்படும் துளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாக உள்ளது என்பதும், மார்கழி மாதத்தில் (டிசம்பர் இறுதியில்) அந்தத் துளை ஏறக்குறைய மறைந்து விடுகிறது என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்கழியில் வரும் ஜனவரி துவக்கத்தில் சூரியன் பூமிக்கு மிக அருகே வருகிறது என்பதும், அந்தக் காலகட்டத்தில்தான் அதிக அளவு ஓசோன் உற்பத்தி ஆகிறது என்பதும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
பூமியின் வளிமண்டலத்தைச் சுற்றியுள்ள ஓசோன் அடுக்கு சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சுகளை உறிஞ்சுவதன் மூலம் ஒரு கவசமாக செயல்பட்டு உயிரினங்களைப் பாதுகாக்கிறது. இது ஒரு கிரீன்ஹவுஸ் வாயு. எனவே பூமியின் வெப்பநிலையை பராமரிக்கவும் இது உதவுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க ஓசோனின் பலனாக உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது. மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவை அதிகரிப்பது மற்றும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைக்கிறது.
ஓசோனின் நன்மைகளை நாம் பெறுவதற்காகவே மார்கழியில் விடியற்காலை எழுவது சிறப்பு மிக்கதாகிறது. மார்கழியில் மட்டுமல்ல, பொதுவாக, விடியலில் எழுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் உடல் நலம் மற்றும் மனநலம் எப்போதும் செம்மை பெறும் என்பது நிதர்சனம்.