New year Gift for Husband  
வீடு / குடும்பம்

வந்தாச்சு புத்தாண்டு.. உங்கள் கணவருக்கு இந்த மாதிரியான கிஃப்ட் கொடுத்து காதலை வெளிப்படுத்துங்கள்!

விஜி

புத்தாண்டு பிறக்க போகிறது. என்னதான் ஒவ்வொரு நாளும் நமக்கு புதிது என்றால் முதல் நாள் முதல் வருடம் என்று தொடங்கும் போது நமக்கு அது ஒரு புதுவித அனுபவத்தையே கொடுக்கிறது. அப்படி இந்த புத்தாண்டை மேலும் புதிதாக்கவும் அழகானதாக்கவும் தான் நம்முடைய நெருக்கமானவர்களுக்கு பரிசு மழை பொழிவோம்.

இது அவர்களுக்கு ஒரு வித நம்பிக்கையை அளிக்கும். நம் அன்பை பரிசு மூலம் வெளிப்படுத்தும் போது அது மேலும் பலமாகும் என்றே சொல்லலாம். அப்படி இந்த ஆண்டு கணவருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.

போட்டோ ஃப்ரேம்:

வழக்கம் போல் இருந்தாலும் கூட இதில் நிறைய அழகான விஷயங்கள் இருக்கிறது. சிறந்த புகைப்படங்கள், சிறந்த நினைவுகள் உள்ள புகைப்படங்களை ஃப்ரேமாக கொடுத்தால் மகிழ்ச்சி பொங்கும். தற்போது நிறைய டிஜிட்டல் மாடலில் கூட ஃப்ரேம்கள் வந்துவிட்டது.

வாட்ச், ஷூ, சட்டை:

உங்கள் கணவர் தினசரி உபயோகிப்பதில் மிகவும் அவருக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து அதை வாங்கி கொடுக்கலாம். இதில் வழக்கமாக தான் இருக்கிறது என்றால் தற்போது கஷ்டமைஸ் என்பது பல இடங்களில் வந்துவிட்டது. வாட்சில் உங்கள் புகைப்படம் அல்லது பெயர், சட்டைம், ஷூவில் கூட பெயர் புகைப்படம் சேர்க்கும் அளவிற்கு டிஜிட்டல் வளர்ந்துவிட்டது.

ஆசைப்பட்டதை நிறைவேற்றுங்கள்:

என்னதான் வேலை என்று ஓடினாலும், கணவர் மனைவியிடமோ, மனைவி கணவரிடமோ என்றோ ஒருநாள் இது கிடைத்தால் நல்லா இருக்கும் என்று கூறியிருப்பார்கள். அது போன்று அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுங்கள்.

நேரம் செலவழியுங்கள்:

எத்தனை கிஃப்ட் கொடுத்தாலும் இந்த கிஃப்ட்டுக்கு ஈடாகாது. உங்கள் கணவரை அவருக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று நேரம் செலவழியுங்கள். நன்றாக சாப்பிடுங்கள், அன்பை பரிமாறி கொள்ளுங்கள்.

இப்படி உப்புமா செய்தால் உடனே காலியாகும்… வேண்டாம் என்றே சொல்ல மாட்டாங்க! 

இந்த 5 விஷயங்கள் தெரியாமல் மேக்கப் பொருட்களை வாங்காதீர்கள்! 

பலரும் அறியாத தேற்றான்கொட்டையின் பல்வேறு பயன்கள்!

இந்த 5 பழக்கங்கள் இருப்பவர்கள் நிச்சயம் புத்திசாலிகளாகத்தான் இருக்க வேண்டும்!

சிவபெருமானுக்கும் கயிலாயத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

SCROLL FOR NEXT