Parkinson's disease, which paralyzes the nerve cells in the brain https://www.panchkarmaayurved.com
வீடு / குடும்பம்

மூளை நரம்பு செல்களை முடக்கும் பார்கின்சன் நோய்!

எஸ்.விஜயலட்சுமி

லகம் முழுவதும் சர்வதேச பார்கின்சன் நோய் தினம் இன்று (ஏப்ரல், 11) கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர் ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர் முதன் முதலில் பார்கின்சன் நோயை அடையாளம் கண்டு 1817ல் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதனால் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 11ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக பார்கின்சன் தினமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த சிக்கலான நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுகிறது. இந்தியாவில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பார்கின்சன் நோய் என்றால் என்ன?

பார்கின்சன் நோய் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். இது மூளையில் உள்ள நரம்பு செல்களை (நியூரான்கள்) படிப்படியாக பலவீனமடையச் செய்து இறக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக, நரம்பு செல்கள் இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிக்கு சமிக்ஞைகளை அனுப்பும் ஒரு இரசாயன தூதுவரான டோபமைன்கள் உள்ளன. பார்கின்சன் நோய் தாக்கும்போது உற்பத்தி செய்யப்படும் டோபமைனின் அளவு குறைந்து மூளையில் அசாதாரண செயல்பாட்டைத் தூண்டுகிறது. இது உடலின் இயக்கக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.

பார்கின்சன் நோயின் பொதுவான அறிகுறிகள்:

இவை நபருக்கு நபர் வேறுபடலாம். இந்நோயின் பொதுவான அறிகுறிகள்:

1. கை, கால்கள், தலை மற்றும் தாடையில் நடுக்கம்,

2. கை. கால்களின் விறைப்பு மற்றும் இயக்கம் குறைதல்,

3. ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் மோசமான சமநிலை, பெரும்பாலும் ஒரு நபர் சமநிலையை இழந்து கீழே விழும் நிலை ஏற்படுகிறது,

4. பேச்சு பிரச்னைகள்,

5. கையெழுத்தில் மாற்றம்,

6. வாசனை அறியும் திறன் குறைவது,

7. குனிந்த தோரணை,

8. கவனம் செலுத்துவது மற்றும் மனப்பாடம் செய்வதில் சிரமம்,

9. பிரமைகள், மனநோய்,

10. சருமத்தில் மெல்லிய மஞ்சள் / வெள்ளை செதில்கள் தோன்றுதல்,

பார்கின்சனின் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தோரணை மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்த உதவும்.

உலக பார்கின்சன் நோய் தினத்தின் முக்கியத்துவம்: உலக பார்கின்சன் நோய் தினம் பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

1. பார்கின்சன் சமூகத்தினரிடையே உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கிறது.

2. நோயின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

3. பார்கின்சன் நோயாளிகளை ஏற்றுக்கொள்வது, ஆதரவளிப்பது மற்றும் சேர்ப்பது.

4. மருத்துவ முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி நிதியை ஊக்குவிக்கிறது.

5. பல்வேறு அறிகுறிகள் மற்றும் சவால்கள் பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது.

6. குறிப்பாக. வயதானவர்களுக்கு பார்கின்சன் நோய் கண்டறியப்படுவதைக் குறிக்கிறது.

7. சுகாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குகிறது.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT