வீடு / குடும்பம்

வீட்டிலேயே செய்யலாம் இயற்கையான செம்பருத்தி பூ ஷாம்பு!

விஜி

பெண்களுக்கு அழகு சேர்ப்பது கருமையான கூந்தல். பல பெண்கள் தங்கள் கூந்தலைப் பராமரிக்க ஏதேதோ செய்து வருகிறார்கள். அப்படிப் பராமரித்தும் சிலருக்கு முடி கொட்டுவது நிற்பதில்லை. காரணம், செயற்கையாக நாம் உபயோகிக்கும் ஷாம்புகள்தான். அதில் நிறைய கெமிக்கல்ஸ் கலக்கப்படுவதால் முடிக்கு ஊட்டச்சத்து இல்லாமல் முடி உடைகிறது. முடியின் வேர் பகுதி பலமில்லாமல் போவதால் முடி கொட்டுகிறது.

இதனைத் தடுக்கவே சீயக்காய் போன்ற இயற்கையான பொருட்களை தலையில் தேய்க்கச் சொல்கிறார்கள் பெரியோர்கள். ஆனால், அந்த சீயக்காய் பொடியே தற்போது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. இனி, இந்த கவலையெல்லாம் விடுங்கள். செம்பருத்தி பூ, சீயக்காய் இருந்தால் போதும். இனி நாமே வீட்டிலேயே இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து குளிக்கலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வும் இருக்காது, நன்றாக வளரவும் செய்யும்.

பூந்திக்கொட்டை - 5, சீயக்காய் - 5, வெந்தயம் - 1 ஸ்பூன், செம்பருத்திப்பூ - (5 - 7) இதில் பூந்திக்கொட்டையை இடித்து உள்ளே இருக்கும் விதையை நீக்கி விட வேண்டும். மேலே இருக்கும் அந்தத் தோலை மட்டும்தான் இந்த ஷாம்புவுக்குப் பயன்படுத்த வேண்டும். பிறகு செம்பருத்தி பூ, காம்பு மற்றும் மேலே இருக்கும் மகரந்தங்களை நீக்கி விடுங்கள். செம்பருத்தி பூவின் இதழ்கள் மட்டும்தான் நமக்குத் தேவை. முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் பூந்தி கொட்டையின் தோல், சீயக்காய், வெந்தயம், செம்பருத்தி பூ, இவை நான்கையும் அரை லிட்டர் தண்ணீரீல் போட்டு மூடி வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இது ஊறட்டும். மறுநாள் காலை இதை அப்படியே ஒரு கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

மிதமான தீயில் கொதிக்கட்டும். 7 லிருந்து 8 நிமிடம் வரை இந்த தண்ணீர் கொதிக்கும்போது இதில் சேர்த்திருக்கும் பொருட்களின் சத்துக்கள் எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கி விடும். பிறகு இது ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றினால் சூப்பரான செம்பருத்தி பூ ஷாம்பு தயார். இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்த, கூந்தல் வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT