வீடு / குடும்பம்

வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதாகி விடாமல் இருக்க வேண்டுமா?

கல்கி டெஸ்க்

இந்தியாவில் இப்போது வாஷிங் மெஷின்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். தற்போது ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த வாஷிங் மெஷின் நமது தினசரி வேலைகளை வெகுவாக குறைக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக ஆடையில் உள்ள அழுக்கை நீக்க நாம் செலவு செய்யும் நேரத்தை இன்று வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைததுவிட்டன. அத்தகைய வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதாகி விடாமல் இருக்க நீடித்து உழைக்க வேண்டும் அல்லவா? கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் வைத்தால் வாஷிங் மெஷின் பழுதடையாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்:

லிக்விட் பயன்படுத்துவது நல்லது வாஷிங் மெஷனில் முடிந்த வரை பவுடர் போடமல்வாஷிங் லிக்விட் பயன்படுத்துவது நல்லது. பவடர் சேர்த்து துவைக்காமல் வாஷிங்லிக்விட் சேர்த்து துவைத்தால் மெஷன் அதிக நாட்கள் உழைக்கும்.

பின்பு வாஷிங் மெஷினில் லிக்விட் ஊற்றத் தனியாக ஒரு பாகம் இருக்கும். இதைமாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அந்த இடம் உப்புக்கறை படிந்து சீக்கிரம் பழுதடைந்து விடவாய்ப்பு உள்ளது.

திறந்து வைக்க வேண்டும் வாஷிங் மெஷினை பகல் நேரங்களில் திறந்து வைக்கவேண்டும். அப்போது தான் அதில் வாடை வராமல் இருக்கும். குறிப்பாக இரவில்மட்டும் மூடி வைத்தால் போதும். குறிப்பாக வாஷிங் மெஷினில் டப் கிளீனர் என்றஆப்ஷன் இருக்கும். இந்த முறையைப் பயன்படுத்தி மாதம் ஒரு முறை வாஷிங்மெஷினை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் வாஷிங் மெஷினில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

முக்கால் பாகம் போதும்குறிப்பாக வாஷிங் மெஷனில் நீங்கள் துணி போடும் போதுமெஷினின் முழு அளிவிற்கு போடாமல், முக்கால் பாகம் வரை போட்டால் மிகவும்நல்லது. குறிப்பாக மெஷின் முழுவதும் துணி போடவே கூடாது.

அதேபோல் வாஷிங் மெஷினில் ட்ரம் மேலே பெல்ட் பகுதி இருக்கும். அங்கு டூத்பிரஷை வைத்து அடிக்கடி சுத்தம் செய்யவது நல்லது. குறிப்பாக அந்த இடங்களில்அழுக்கு படிந்து மெஷின் ஓடாமல் நின்றுவிட வாய்ப்பு உள்ளது.

மோட்டார் பாதுகாப்பு?ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை துணிகள் போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது ஒரு முறை துவைத்த பிறகு குறைந்ததுஅரைமணி இடைவெளி விட்டு அடுத்த முறை துணி போட வேண்டும். அதாவதுஇடைவெளி விடாமல் தொடர்ந்து துணிகளைப் போட்டு கொண்டே இருந்தால்வாஷிங் மெஷினின் மோட்டார் பழுதடைந்து விடும்.

டாப்லோட் மெஷின்நாம் அழுக்கு அதிகம் உள்ள துணிகளை ஊற வைத்து பிறகுதான் மெஷினில் போடுவோம். அப்படி போடும் போது துணிகளில் ஈரம் நன்றாகப்பிழிந்து பிறகு தான் மெஷினில் சேர்க்க வேண்டும். குறிப்பாக டாப்லோட்மெஷின்களில் பெரிதாகப் பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால் ஃப்ரண்ட் லோடுபயன்படுத்தும் பயன்கள் அப்படி ஈர துணியை போடும் போது சில சமயம் மெஷின்சுற்றமால் நின்றுவிடும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

நாணயங்கள்அதேபோல் தவறுதலாக ஆடையில் சாவி, நாணயங்கள் போன்றஉலோகங்களை வைத்து அப்படியே துவைக்கப் போட்டால், வாஷிங் மெஷினின்செயல்பாட்டை அதிகமாகப் பாதிக்கும். எனவே இவற்றை முடிந்த அளவுக்குத்தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோல் வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும்முன்பு அவற்றில் ஏதாவது இருக்கிறதா என்பதைக் கவனமான பார்க்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT