வீடு / குடும்பம்

உப்போ உப்பு! உப்பின் பல பயன்பாடுகள்!

இந்திராணி தங்கவேல்

*டைகளில் சாயம் போகும் என்ற பயம் இருந்தால், அதை முதலில் உப்பு கலந்த நீரின் நனைத்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது. 

*சிவப்பு எறும்பு கடித்த இடத்தில் உப்பு போட்ட இளஞ்சூடான நீரை விட்டு அலம்பினால் வலி மறைந்துவிடும். 

*மீது கல் உப்பைத் தூவி வைத்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். 

*அலுமினியப் பாத்திரங்களில் உப்பு, புளி இவைகள் கலந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது. உப்பிலும், புளியிலும் அலுமினியம் கரையும். 

*ஸ்டோர் ரூமில் எறும்பு அதிகமாக இருந்தால் உப்புத் தூள் தூவ வேண்டும். 

*சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த நீரில் துணியை ஊறவைத்து, துவைத்தால் துணி சலவைக்குப் போட்டதுபோல் இருக்கும். 

*ஒரு சிறு துணியில் உப்பை மூட்டையாகக் கட்டி வைத்தால், பிஸ்கட்டுகள் நமுக்காமல் இருக்கும். 

* பிரம்பு நாற்காலிகள் தொய்ந்துபோகாமல் இருக்க, முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்து, பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து, வெயிலில் காயவைத்தால் பழைய வடிவத்துக்கு வந்துவிடும். 

*ஒரு பிடி வேப்பிலை, ஒரு கையளவு உப்பு சேர்த்து கோதுமையைக் கொட்டிவைத்தால் கோதுமை சுத்தமாக இருக்கும். புழு, பூச்சிகள் அண்டாது. 

*பாட்டில் மூடி திறப்பதற்குக் கடினமாக இருந்தால், கழுத்துப் பகுதியில் சிறிது எண்ணெய், உப்பு கலந்து தேய்த்தால் எளிதாகத் திறக்க வரும். 

* மிக்ஸியின் பிளேடுகள் மழுங்கிவிட்டால் கல்லுப்பை ஒரு கை அளவு போட்டு ஓரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகிவிடும். 

*சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு கேஸ் அடுப்பை துடைத்தால் எளிதாகச் சுத்தமாகிவிடும். 

*ஃப்ரீசரில் உள்ள ஐஸ் தட்டுகளைச் சுலபமாக எடுக்க ஒரு பழைய காஸ் கட்டைப் போடலாம் அல்லது சிறிது கல்லுப்பைத் தூவி வைக்கலாம். 

*கரைத்த நீரில் கிழங்குகளை 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து வேகவிட்டால் விரைவாக வேகும்.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT